கும்பகோணம் மாசிமக பெருவிழா: மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்! |Macimaka festival in Kumbakonam

கும்பகோணம் மாசிமக பெருவிழா: மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்!

மாசிமக பெருவிழாவை முன்னிட்டு இன்று கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டது.

கும்பகோணம் மாசிமக பெருவிழா: மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்! |Macimaka festival in Kumbakonam

இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மாசிமக பெருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், மகாமக திருவிழாவில் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர், அருள்மிகு காசிவிஸ்வநாதர், அருள்மிகு வியாழ சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அருள்மிகு அபிமுகேஸ்வரர், அருள்மிகு கௌதமேஸ்வரர் என்று ஆறு சிவன் கோவில்களிலும் இந்த மாசிமகத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தநிலையில், அருள்மிகு சக்கரபாணி சுவாமி, அருள்மிகு ராஜகோபாலசுவாமி, அருள்மிகு ஆதிவராக பெருமாள் ஆகிய பெருமாள் கோவில்களிலும் கடந்த 18ம் தேதி மாசிமகவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.அத்துடன் இக்கோவில்களில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

காசிவிசுவநாதர், அருள்மிகு அபிமுகேஸ்வரர், அருள்மிகு கௌதமேஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில் இருக்கும் உற்சவர்கள் தேரோட்டத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சியளித்தனர். இன்று காலை 8 மணிக்கு அருள்மிகு சக்கரபாணி சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் மாசிமக பெருவிழா: மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்! |Macimaka festival in Kumbakonam

இந்நிலையில், மாசி மகத்தை ஒட்டி, மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல் செய்தனர். தீர்த்தவாரி இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ள நிலையில், குளத்தில் இறங்காமல் படிகளில் அமர்ந்து பக்தர்கள் நீராடுகிறார்கள்.

மேலும், மாசிமக விழாவின் முக்கிய நிகழ்வான 12 சிவாலயங்களிலும் இருந்தும் சுவாமி மற்றும் அம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பட்டு குளக்கரையில் எழுந்தருளி, தீர்த்தவாரி செய்யும் நிகழ்ச்சி, இன்று 12 மணிக்கு நடைபெறயுள்ளது.

கும்பகோணம் மாசிமக பெருவிழா: மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்! |Macimaka festival in Kumbakonam

இதையடுத்து, கொரோனா குறைந்து வருவதால் பக்தர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குளத்திற்கு அருகே வாகனங்கள் செல்ல முடியாத அளவில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கண்காணிப்பு கேமிராக்கள் 32 இடங்களில் பொருத்தப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*