கொரோனா அதிகரிப்பு: கோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!!

13 / 100

கோவை மாவட்டத்திலும், கோவைக்கு அருகில் உள்ள கேரளாவிலும் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் நாளை முதல் கோவைக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அதிகரிப்பு: கோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!!

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது, கோவை மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, காந்திபுரம் 5,6,7வது வீதிகள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி ரோடு, சாரமேடு ரோடு ராயல் நகர் சந்திப்பு, ரைஸ் மில் ரோடு, என்.பி.இட்டேரி ரோடு, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு போன்ற வீதிகளில் இயங்குகிற அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

கொரோனா அதிகரிப்பு: கோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!!

கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி, சில்லரை விற்பனைக்கு அனுமதியில்லை. மேலும், 50 சதவிகித கடைகள் மட்டும் சுழற்சி முறையில் திறக்க அனுமதி வழங்கப்படும்.

சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இதனை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல கேரள-தமிழ்நாடு மாநில எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி சோதனைச்சாவடி வழியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கோவிட் இல்லா சான்று அல்லது கொரோனா தடுப்பூசி 2 தவனைகள் செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும்.

கொரோனா அதிகரிப்பு: கோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!!

மேற்கண்ட சான்றுகள் இல்லையெனில் சோதனைச்சாவடிகளிலேயே Random RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்படும். மக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து கொரோனா தடுப்பு நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*