கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: கனகராஜ் சகோதரர் தனபாலுக்கு 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

72 / 100

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கில் கைது செய்யபட்டு கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனபாலை ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: கனகராஜ் சகோதரர் தனபாலுக்கு 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோடநாடு கொலை-கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், அவரது நண்பர் ரமேஷ் ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: கனகராஜ் சகோதரர் தனபாலுக்கு 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோடநாடு சதி திட்டம் குறித்து தனபாலுக்குத் தெரிந்திருந்த நிலையில் விசாரணையின் போது தெரிவிக்காமல் மறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சாலை விபத்தில் இறந்த கனகராஜின் செல்போன் பதிவுகளை அழித்ததாக கூறப்படுகிறது. சம்பவம் சம்மந்தமான சாட்சியங்களை அழித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் அவர்களை கடந்த 25-ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: கனகராஜ் சகோதரர் தனபாலுக்கு 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

இந்தநிலையில், இருவருக்கும் நவம்பர் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதால் கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில், தனபாலிடம் கூடுதல் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் மேலும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நேற்று முன்தினம் (அக்.26) தனிப்படை போலீசார் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, தனபாலை மட்டும் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதையடுத்து, தனபாலை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சஞ்சய் பாபா அனுமதி அளித்துள்ளார்.

சரவெடி சத்தம் தெறிக்க… தெறிக்க… வெளியான ‘அண்ணாத்த’ அனைத்து பாடல்கள்!

நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டப் போராட்டம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கனமழை எதிரொலி: எட்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

About Vengai Vetri 297 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*