கோவில்பட்டியில் களமிறங்கும் டிடிவி.தினகரன்..!

கோவில்பட்டியில் களமிறங்கும் டிடிவி.தினகரன்..!

சசிகலா அரசியலிருந்து பின்வாங்கி இருந்தாலும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் போட்டியிடப் போவதாக அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் இறங்கினார். சில நாட்களுக்கு முன் கட்சி சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு பெறப்பட்டது. அதன்பிறகு கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதிப் பங்கீடும் நடைபெற்று வருகிறது.

கோவில்பட்டியில் களமிறங்கும் டிடிவி.தினகரன்..!

இந்தநிலையில், நேற்று 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை தினகரன் வெளியிட்டார். ஆனால், அதில் அவர் பெயர் வரவில்லை. தற்போது, இரண்டாம் கட்டமாக 50 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டிருக்கிறார். அந்தப் பட்டியலில் முதலாவதாக அவர் பெயர் இருக்கிறது. அதன்படி டிடிவி.தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய தேனி தொகுதிகளைத் தேர்ந்தெடுப்பார் என்று நினைத்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் களம் காண்கிறார்.

கோவில்பட்டியில் களமிறங்கும் டிடிவி.தினகரன்..!

இதையடுத்து, நேற்று வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியலில் கோவில்பட்டி தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற அமைச்சர் கடம்பூர் ராஜுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவை எதிர்த்துக் களம் காண்கிறார். டிடிவி தினகரனுக்கு பெருவாரியான ஆதரவு இருக்கும் தேனி, தஞ்சாவூர் பகுதியில் போட்டியிடாமல், கோவில்பட்டியை டிடிவி தினகரன் தேர்ந்தெடுத்தது புரியாத புதிராகவே இருக்கிறது.

கோவில்பட்டியில் களமிறங்கும் டிடிவி.தினகரன்..!

அரசியல் விளம்பரங்கள் குரல் மூலமாக ஆடியோவில் பதிவு செய்ய இந்த எண்ணில் அணுகவும்
99427 27135

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*