கோவை மத்திய சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை? போலீசார் சோதனை..!!

63 / 100

கோவை மத்திய சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் உள்ளதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை மத்திய சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை? போலீசார் சோதனை..!!

கோவை மத்திய சிறையில் சிகரெட், பீடி, குட்கா, கஞ்சா, செல்போன் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கோவை மாநகர போலீஸ் சார்பில் 40 பேரும், சிறைத் துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களும் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை மத்திய சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை? போலீசார் சோதனை..!!

கோவை மத்திய சிறையில் மிகவும் பாதுகாக்கப்பட்ட சிறை பகுதிகள், வால்மேடு, கோபுரமேடு, கிளை சிறை அறைகள் மற்றும் சிறைத்துறை மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சோதனைகள் நடைபெற்றது. நடைபெற்ற சோதனையில் பிடிபட்டவைகள் குறித்து போலீஸ் வட்டாரங்கள் வெளியிடவில்லை.

இதேபோல் தமிழகத்தில் உள்ள 9 சிறைகளிலும் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் 2020-ஆம் ஆண்டில் நடைபெற்ற சோதனைக்குப் பிறகு மீண்டும் இன்று நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*