கோவை மாநகராட்சி 3 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்..!

62 / 100

கோவை மாநகராட்சியில் பணியாற்றி வந்த 3 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், மேலும் 2 பேரை கட்டாயக் காத்திருப்பு பட்டியல் வைக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சி 3 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்..!

தமிழ்நாடு அரசின் கூடுதல் முதன்மை செயலர் சிவ்தாஸ் மீனா கோவை மாநகராட்சியில் பணியாற்றி ஐந்து அதிகாரிகளை இடமாற்றம் செய்து, கட்டாய காத்திருப்பிலும் வைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, மாநகராட்சியில் முதன்மை பொறியாளராக பணியாற்றி வந்த லட்சுமணன், துணை செயற்பொறியாளராக பணியாற்றி சரவணகுமார் ஆகியோர் பணியிலிருந்து அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டாயக் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, மாநகராட்சியில் செயற்பொறியாளராக பணியாற்றி வந்த பார்வதியை வேலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி 3 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்..!

இந்தநிலையில், மற்றொரு செயற்பொறியாளராக பணியாற்றி வந்த ஞானவேல்யை ஈரோடு மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஞானவேலுக்கு பதிலாக ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றி வந்த ராமசாமி என்பவரை கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, கோவை மாநகராட்சியில் நகரமைப்பு பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரனை, மதுரை மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரவிச்சந்திரனுக்கு பதிலாக மதுரையில் பணியாற்றிவந்த கருப்பாத்தாள் கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*