சசிகலா அரசியலில் இருந்து விலகியது ஏன்?- டிடிவி தினகரன் விளக்கம்

சசிகலா அரசியலில் இருந்து விலகியது ஏன்?- டிடிவி தினகரன் விளக்கம்

அதிமுகவை மீட்டெடுக்கத் தான் அமமுகவை ஆரம்பித்தோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலா அரசியலில் இருந்து விலகியது ஏன்?- டிடிவி தினகரன் விளக்கம்

பெங்களூருவில் இருந்து வந்த சசிகலா, தமிழக அரசியலில் புயலை கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமைதியாக வீட்டுக்குள் முடங்கினார். சில நாள் அமைதிக்கு பிறகு தற்போது அவர் அறிக்கையை வெளியிட்டார். அறிக்கையில், தான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்றும், அதிமுக ஆட்சிக்கு இடையூறு செய்யமாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.

சசிகலா அரசியலில் இருந்து விலகியது ஏன்?- டிடிவி தினகரன் விளக்கம்

இதையடுத்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், எங்களை அதிமுகவிலிருந்து நீக்கியதால்தான் நாங்கள் வேறு வழியின்றி புதுக்கட்சியை ஆரம்பித்தோம். அதிமுகவை மீட்டெடுக்கவே இந்த கட்சியை ஆரம்பித்தோம்.

சின்னம்மா, ஆரம்பத்திலிருந்தே ஒற்றுமையாக இருக்கவேண்டுமென்றே கூறிவந்தார். நான் ஒரு பேசுப்பொருளாக இருக்க விரும்பவில்லை என சின்னம்மா விலகினார். இங்கே யாருமே ஒற்றுமையாக இல்லை என்பதால் தான் அரசியலில் இருந்தே விலகுவதாக சின்னம்மா தெரிவித்தார். சின்னம்மா கட்சியிலிருந்து ஒதுங்குவது எனக்கே வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*