சசிகலா ஆடியோ-வீடியோவை திடீரென்று நிறுத்தியது இதனால்தான்!!

11 / 100
சசிகலா ஆடியோ-வீடியோவை திடீரென்று நிறுத்தியது இதனால்தான்!!
சசிகலா ஆடியோ-வீடியோவை திடீரென்று நிறுத்தியது இதனால்தான்!!

அதிமுகவை வழி நடத்தப்போவதாக சசிகலா தொண்டர்களிடம் பேசிய ஆடியோவை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். வீடியோவும் வெளியிட்டு வந்தார். இதற்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார் உள்ளிட்டவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வி.கே.சசிகலாவால் அதிமுகவை ஒருபோதும் கைப்பற்ற முடியாது. அதிமுக கட்சிக்குள் சசிகலா உள்ளே நுழையவே முடியாது என்று சொல்லி வந்தனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் மட்டும் மவுனமாக இருந்து வந்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் மவுனம் அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், டெல்லியில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி கே.பழனிச்சாமி இருவரும் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின்னர், வி.கே.சசிகலா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவாரா? என்ற கேள்விக்கு, வி.கே.சசிகலாவால் ஒருபோதும் அதிமுகவை கைப்பற்ற முடியாது என்று தெரிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். அவரின் இந்த அதிரடிக்கு பின்னர் வி.கே.சசிகலா அமைதியாக இருக்கிறார். அமமுகவை கலைத்துவிட்டு அதிமுகவில் இணையப்போகிறார் வி.கே.சசிகலா என்ற பேச்சுகள் இருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சினால் தொடர்ந்து ஆடியோ-வீடியோ வெளியிட்டு வந்த வி.கே.சசிகலா, கடந்த ஒரு வாரமாக அமைதியாகவே இருக்கிறார்.

இந்தநிலையில், வி.கே.சசிகலா அதிமுகவிற்கு தலைமை ஏற்க முயற்சிப்பதை விட அமமுகவிற்கு தலைமையேற்று தொண்டர்களை சந்தித்து வரவேண்டும் என்பதையே விரும்புவதாக அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

சசிகலா ஆடியோ-வீடியோவை திடீரென்று நிறுத்தியது இதனால்தான்!!

ஓ.பன்னீர்செல்வமும் கைவிரித்துவிட்டதால் அடுத்து வி.கே.சசிகலா ஒன்றைத்தான் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கிறார். அது பொதுச்செயலாளர் வழக்கு. அந்த வழக்கிலும் தனக்கு பாதகமான தீர்ப்பு வந்துவிட்டால், மறுபடியும் அதிமுகவை கைப்பற்ற முயற்சிப்பது வீண். கொரோனா ஊரடங்கு முடிவடைந்த பின்னர் அதிமுக தொண்டர்களை சந்திப்பதாக வி.கே.சசிகலா சொல்லிவந்தார். அதற்கு முன்னோட்டமாக தான் பலரிடம் தொலைபேசியில் பேசி அந்த ஆடியோவை வெளியிட்டு வந்தார்.

அதிமுக கட்சிக்குள் வி.கே.சசிகலா நுழைய முடியாது என்பதை அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் விடாப்பிடியாக இருந்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் வழக்கும் பாதகமாக வந்ததால், அதன் பிறகு அதிமுகவில் நுழைய முயற்சிப்பதை விட அமமுகவிற்கு தலைமை ஏற்று நடத்த வேண்டும். அமமுகவினரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்று அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*