சசிகலா ஆன்மீகத்தை நோக்கி பயணம்..!

சசிகலா ஆன்மீகத்தை நோக்கி பயணம்..!
65 / 100

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி அரசியல் களம் அனல் பறந்துக் கொண்டிருக்கிறது. இதில், திடீர் திருப்பமாக சசிகலா மற்றும் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார்கள். அதிமுகவை மீட்டெடுக்க வேண்டுமென்று என்று துடித்துக் கொண்டிருந்த சசிகலா, சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, அதற்கான பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டார். இதற்காகவே, வழக்குகள் அனைத்தையும் தூசி தட்டினார்.

சசிகலா ஆன்மீகத்தை நோக்கி பயணம்..!

ஆனால், சசிகலாவை சேர்த்துக் கொள்ள சொல்லி பாஜக தலைமையே அதிமுகவிற்கு கோரிக்கை விடுத்தது. எதையும் காதில் போட்டுக் கொள்ளாத அதிமுக, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இந்தநிலையில், தன்னைச் சுற்றி நடக்கும் வேளைகளை சரியாக கணித்த சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக, திடீரென்று அறிக்கை வெளியிட்டார். சசிகலாவை முன்வைத்து அமமுகவை இந்தத் தேர்தலில் தேற்றி விடலாம் என்ற டிடிவி.தினகரனின் கனவு பாழாய் போனது.

சசிகலா ஆன்மீகத்தை நோக்கி பயணம்..!

இதற்குமேல் சசிகலா இல்லாமல்தான், அமமுக செயல்பட வேண்டும் என்பதை புரிந்து கொண்ட டிடிவி.தினகரன், மனதை தேற்றிக் கொண்டு தேர்தல் பணிகளில் ஈடுபட ஆரம்பித்து விட்டார். இதையடுத்து, அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்ட சசிகலா, தற்போது ஆன்மீகத்தை நோக்கி பயணம் செல்ல இருக்கிறார். வரும் 15ஆம் தேதி முதல் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கோவில்களுக்கு சென்று, வழிபாடு செய்ய திட்டமிட்டிருக்கிறாராம். தேர்தலுக்கு பின்னர் மீண்டும் அரசியலில் ஈடுபடவும் சசிகலா இந்த ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளலாம் என்கிறார்கள் சிலர்..!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*