சசிகலா இல்லம் முன் குவிந்தனர் தொண்டர்கள்: சசிகலா இல்லம் முன்பு பரபரப்பானது..!

சசிகலா இல்லம் முன் குவிந்தனர் தொண்டர்கள்: சசிகலா இல்லம் முன்பு பரபரப்பானது..!

பெங்களூருவில் இருந்து வந்த சசிகலா, தி.நகரில் உள்ள இல்லத்தில் சசிகலா வசித்து வருகிறார். சசிகலா வந்தபிறகு தமிழக அரசியலில் புயலை கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமைதியாக வீட்டுக்குள்ளேயே முடங்கினார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி தொண்டர்களுடன் உரையாடினார்.

சசிகலா இல்லம் முன் குவிந்தனர் தொண்டர்கள்: சசிகலா இல்லம் முன்பு பரபரப்பானது..!

சசிகலா அன்று பேசியபோது, அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனக் கூறினார். சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், டிடிவி.தினகரன் மட்டும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை வழி நடத்தப்போவதாகவும், அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயார் என்றும் தொடர்ந்து கூறிவந்தார்.

ஆனால், சசிகலா ஒரு இடத்தில் கூட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை பற்றி இதுவரை பேசவேயில்லை. இந்தநிலையில்தான், திடீரென சசிகலா அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார்.

சசிகலா இல்லம் முன் குவிந்தனர் தொண்டர்கள்: சசிகலா இல்லம் முன்பு பரபரப்பானது..!

இதையடுத்து, சசிகலா இல்லம் முன்பு பரபரப்பானது. அவரது இல்லத்தின் முன்பு, அவரது ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்கள் அனைவரும் திரண்டு வருகின்றனர். சின்னம்மா அரசியலை விட்டு விலகக்கூடாது என்றும் தெரிவித்து வருகின்றனர்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*