சசிகலா தமிழகம் வருகையில் திடீர் தேதி மாற்றம்: வருகிற 8ஆம் தேதி தமிழகம் வருகிறார்..! -டிடிவி தினகரன் அறிவிப்பு

சசிகலா கொரோனா சிகிச்சை முடிந்து பெங்களூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ஓய்வெடுத்து வரும்நிலையில், வருகிற 8ஆம் தேதி சென்னை வருகிறார். காலை 9 மணிக்கு மேல் கர்நாடகாவில் இருந்து கிளம்புகிறார்.

சசிகலா தமிழகம் வருகையில் திடீர் தேதி மாற்றம்: வருகிற 8ஆம் தேதி தமிழகம் வருகிறார்..! -டிடிவி தினகரன் அறிவிப்பு

திடீரென்று தேய் மற்றம். 7ஆம் தேதி அன்று சென்னை வருவதாக குரியநிலையில் நிலையில், திடீரென்று அவரது வருகையின் தேதியை 8ஆம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் வருகிற 7ஆம் தேதிக்கு பதிலாக 8-2-2021 திங்கள்கிழமை அன்று காலை 9 மணியளவில்,பெங்களூருவிலிருந்து புறப்பட்டு தமிழகம் வருகிறார் என்று அறிவித்துள்ளார்.

மேலும் கூறிய டிடிவி.தினகரன், தமிழக எல்லையிலிருந்து சென்னை வரும்வரை வழி நெடுக சின்னம்மா அவர்களுக்கு அளிக்கப்படுகிற வரவேற்பில், போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும், எவ்வித இடையூறுகளும் இல்லாமல் அமைத்துக்கொள்ள வேண்டும்.

சசிகலா தமிழகம் வருகையில் திடீர் தேதி மாற்றம்: வருகிற 8ஆம் தேதி தமிழகம் வருகிறார்..! -டிடிவி தினகரன் அறிவிப்பு

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று கால வழிமுறைகளை பின்பற்றி, முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, தியாகத்தலைவி சின்னம்மா அவர்களுக்கும் உங்கள் அன்புச் சகோதரனாகிய எனக்கும் எவ்வித அவப்பெயரும் ஏற்படாத வண்ணம் கழக உடன்பிறப்புகள் பங்கேற்றிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காத்த இயக்கத்தை மீட்டெடுக்கவும், அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் தீயசக்தியான தி.மு.கவை தலையெடுக்கவிடாமல் செய்திடவும், அம்மா அவர்களின் உண்மை தொண்டர்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு, ஒற்றுமையோடு இருந்து செயல்படுவோம் என்று டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*