சிக்னல் கொடுத்த விஜய்: வேட்பாளர்கள் பட்டியல் ரெடி!

65 / 100

வழக்கமான உள்ளாட்சி தேர்தல் போல் இல்லாமல் இம்முறை நடைபெறும் தேர்தல் கொஞ்சம் ஸ்பெஷல். நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் இம்முறை உள்ளாட்சி தேர்தலில் களமிறங்குகிறது. தமிழக அரசியலில் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என்று  நடிகர்கள் அரசியலில் கால்பதித்தனர். சமீபத்திய தமிழக அரசியலில் நுழைந்த   கமலும் ஏதோ அதிர்வுகளைக் கிளப்ப வித்தைகள் செய்து கொண்டிருக்கிறார். இந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி பேசவேண்டிய அவசியமில்லை. அவர் வேற டாபிக்.

சிக்னல் கொடுத்த விஜய்: வேட்பாளர்கள் பட்டியல் ரெடி!

தமிழ்நாட்டு அரசியல் எப்போதுமே உள்ளாட்சியின் வார்டுகளிலிருந்து தான் ஆரம்பிக்கும். எம்ஜிஆர் என்ற திரை பிம்பமாக இருந்தாலும் உள்ளாட்சியில் பலப்படுத்தியதால் தான் அவர் ஆரம்பித்த அதிமுக வெற்றியை தமிழகத்தில் உரித்தாக்கியது. விஜய் இதை  சரியாகப்புரிந்து கொண்டாரோ என்ற ஆச்சரியமும்  மேலோங்குகிறது. விஜய் எம்ஜிஆரை சினிமாவில் உயர்த்திப் பிடித்ததுபோல், தற்போது எம்ஜிஆரை அரசியலிலும் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டாரோ என்றும் தோன்றுகிறது. நடிகர் கமலஹாசன் கூட மக்களவை, சட்டப்பேரவை என பெரிய தேர்தல்களிலேயே களமாடினார்.

சிக்னல் கொடுத்த விஜய்: வேட்பாளர்கள் பட்டியல் ரெடி!

ஆனால், விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சியை டார்கெட் செய்கிறது. விஜய் அரசியலின் வேரை தேடி ஓடுகிறார். நேற்று தான் இந்த அறிவிப்பு வெளியானது. சென்னையை அடுத்த பனையூரில் செயல்படும் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த்தின் தலைமையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட நிர்வாகிகளுடன் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரிடமும் அரசியல் குறித்த கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதில் தான் சுயேச்சையாகப் போட்டியிடலாம் என்ற முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிக்னல் கொடுத்த விஜய்: வேட்பாளர்கள் பட்டியல் ரெடி!

ஆனால், விஜய் மக்கள் இயக்கத்தினர் அடுத்தக்கட்டத்தை நோக்கி புறப்பட்டு விட்டார்கள் என தற்போதைய தகவல் சொல்கிறது. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியிருக்கிறது. பெரியவெளிக்காடு ஊராட்சி மன்ற 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுதா என்பவரும்,  இயக்கத்தின் கிளை தலைவர் சத்யா, கொடூர் ஊராட்சியில் 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சிக்னல் கொடுத்த விஜய்: வேட்பாளர்கள் பட்டியல் ரெடி!

இதையடுத்து, பரமேஸ்வரிமங்கலம் கிளை தலைவர் பாலாஜி என்பவர், பரமேஸ்வரிமங்கலம் ஊராட்சியில் 6வது வார்டு உறுப்பினர் பதவிக்கும்,  ஒன்றிய இணை செயலாளர் திருநாவுக்கரசு நீலமங்கலம் ஊராட்சியில் 4வது வார்டு உறுப்பினர் பதவிக்கும்  களமிறங்குகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடப் போவதாகவும் அடுத்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை அளிக்கிறது.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*