சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: கனிமொழி ட்வீட்!

சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: கனிமொழி ட்வீட்!

தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என திமுக கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: கனிமொழி ட்வீட்!

டிஜிபி ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐபிஎஸ் அதிகாரியே நேரில் சென்று டிஜிபி திரிபாதியிடம் புகார் கொடுத்தார். நாடு முழுவதும் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வரும் நிலையில், பெண் காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலைமை ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனை சர்ச்சையை கிளப்பிய நிலையில், டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மீதான புகாரை விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரிக்க சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து, காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலைமையா? என அதிருப்தியை வெளிப்படுத்தியது.

சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: கனிமொழி ட்வீட்!

இந்த நிலையில், ராஜேஷ்தாஸ் மீதான இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென திமுக எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விஷயத்தில் நியாயமான விசாரணையை நாங்கள் விரும்புவதால் டி.ஜி.பி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார். பாலியல் சம்பந்தப்பட்ட அதிகாரியை உடனடியாக இடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். டி.ஜி.பியால் பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பல அச்சுறுத்தல்களைப் பெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது வெட்கக்கேடானது என குறிப்பிட்டுள்ளார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*