சுட்டெரிக்கும் வெயில்: 8 மாவட்டங்களுக்கு அனல்பறக்கும் வெப்பம்!

தமிழகத்தில் இதுவரை இருந்த பனிக்கலாம் முடிந்தது.இதையடுத்து, இன்னும் ஒரு சில மாதங்களில் கோடை காலம் தொடங்கஉள்ளது. இந்தநிலையில், இப்போதே வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. இதைவிட கத்திரி வெயிலின்போது எப்படி இருக்குமோ என்ற பயத்தில் தவிக்கிறார்கள் மக்கள்.

சுட்டெரிக்கும் வெயில்: 8 மாவட்டங்களுக்கு அனல்பறக்கும் வெப்பம்!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், நேற்று செய்தியாளர்களை சந்தித்து வளிமண்டலத்தில் காற்று சுழற்சி இல்லாததால் மார்ச் 3ஆம் தேதி வரையில் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறினார்.

சுட்டெரிக்கும் வெயில்: 8 மாவட்டங்களுக்கு அனல்பறக்கும் வெப்பம்!

இதையடுத்து, கரூர் மாவட்டம் பரமத்தியில், அதிகபட்சமாக 100 டிகிரியும், சேலம் மற்றும் நாமக்கல்லில் 99 டிகிரியும் வேலூர், திருச்சி, தருமபுரி ஆகிய இடங்களில் 97 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சென்னையில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, திருச்சி, சேலம், கரூர், நாமக்கல் மற்றும் மதுரையில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுட்டெரிக்கும் வெயில்: 8 மாவட்டங்களுக்கு அனல்பறக்கும் வெப்பம்!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பை விட இரண்டு அல்லது மூன்று டிகிரி அதிகபட்சமாக வெப்பநிலை பதிவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*