சுதந்திர தினத்தன்று குடும்பத் தலைவிக்கு 1,000: ரேஷன் கார்டில் குடும்பத் தலைவிகளுக்குதான் ரூ.1,000.?

14 / 100

தமிழகத்தில் அரிசி, மற்றும் நெலை கடத்தல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

சுதந்திர தினத்தன்று குடும்பத் தலைவிக்கு 1,000: ரேஷன் கார்டில் குடும்பத் தலைவிகளுக்குதான் ரூ.1,000.?

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர், ஆட்சி பொறுப்பெற்றவுடன் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்ததை போன்றே கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்பட்டது. இதுவரையில், 99 சதவிகித குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுவிட்டது. அடுத்ததாக குடும்பத் தலைவிகளுக்கான மாதம் 1,000 ரூபாய் திட்டத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். திட்டத்தில், குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் பெயரில் மனைவி பெயர் இருக்க வேண்டுமா வேண்டாமா? கணவர் பெயர் இருந்தால் அதை மற்ற வேண்டுமா என்ற விவகாரத்தில் யாரும் அச்சமடைய வேண்டாம். இது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவினை விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.

Q

நாங்கள் பதவியேற்று இந்த 3 மாதகாலத்தில் அரிசி மற்றும் நெல் கடத்தலில் ஈடுபட்டதாக 1,800 வழக்குகள் பதியப்பட்டு, 1,859 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட 283 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, 8,000 நியாய விலை கடைகளுக்கு இதுவரை சொந்த கட்டிடம் இல்லாததால் வாடகை செலவை குறைக்க சொந்த கட்டிடம் கட்டுவதற்குகான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், 3,38,512 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் தகுதியானவர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.

சுதந்திர தினத்தன்று குடும்பத் தலைவிக்கு 1,000: ரேஷன் கார்டில் குடும்பத் தலைவிகளுக்குதான் ரூ.1,000.?

நியாயவிலைக்கடைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் இரண்டு மாதங்களுக்குள் நிரப்பப்படும். மேலும், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம், பயோமெட்ரிக் மூலமாக பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. விரைவில் இத்திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*