சுபயோக சுபதினத்தில் வாக்களிக்கலாம் வாங்க: தேர்தல் ஆணையம் அழைப்பிதழ்

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மார்ச் 27-ம் தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதில் தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சுபயோக சுபதினத்தில் வாக்களிக்கலாம் வாங்க: தேர்தல் ஆணையம் அழைப்பிதழ்

இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கொரோனா காலத்தில் வாக்களிக்க மக்கள் அச்சமின்றி வருவார்களா? என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. இந்த சூழலில் தேர்தல் ஆணையம் அதிகளவில் வாக்காளர்களை கவர திட்டமிட்டுள்ளது. இதனால் பல விழிப்புணர்வுபணிகளை மேற்கொண்டு வருகிறது.

சுபயோக சுபதினத்தில் வாக்களிக்கலாம் வாங்க: தேர்தல் ஆணையம் அழைப்பிதழ்

இந்நிலையில் தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில், “அன்புடையீர் நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் பங்குனி 24ஆம் தேதி 6-4 -2021 செவ்வாய்க்கிழமை சுபயோக சுபதினத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குள் “இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம்”.


தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெறுவதால் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தங்கள் குடும்பத்திலுள்ள அனைவரும், தனிநபர் இடைவெளியை கடைபிடித்து, சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து, தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்யும்படி அன்புடன் அழைக்கிறோம்..! வாருங்கள் வாக்களிப்போம்! என்று திருமண அழைப்பிதழ் ஸ்டைலில் விழிப்புணர்வு செய்துள்ளனர்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*