ஜெயலலிதா 1989லில் எடுத்த முடிவு: நான் அரசியலில் இருந்தே விலகுகிறேன் -வி.கே.சசிகலா

ஜெயலலிதா 1989லில் எடுத்த முடிவு: நான் அரசியலில் இருந்தே விலகுகிறேன் -வி.கே.சசிகலா

சசிகலா தற்போது அறிவித்ததுபோல், 1989ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் அரசியலில்லிருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஜெயலலிதா 1989லில் எடுத்த முடிவு: நான் அரசியலில் இருந்தே விலகுகிறேன் -வி.கே.சசிகலா

ஜெயலலிதாவும் 1989ஆம் ஆண்டு அவர் எழுதிய கடிதத்தில், நான் அரசியல் விட்டு விலகுகிறேன். அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த என்னை எம்ஜிஆர் அரசியலில் அறிமுகப்படுத்தினார். அவர் மறைந்த உடனேயே அரசியலை விட்டு விலக எண்ணினேன். நேர்மை, நாணயம் ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து வந்த போதிலும் அரசியலில் பல கீழ்த்தரமான இழிச்சொற்களுக்கும் ஆளாக்கப்பட்டு விட்டேன்.

மேலும், 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து எனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு முழுவதும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்தேன். இதனால் உடல் நலத்தை கருத்தில் கொண்டு நான் அரசியலை விட்டு விலகுகிறேன். மேலும், எனக்கு இதுவரை ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றி என்று அவர் அந்தகடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஜெயலலிதாவின் இந்த முடிவு மாறியது. இதனால் இதுபோன்ற முடிவுகள் அவ்வப்போது மாறக்கூடியதாக தான் அரசியல் களத்தில் பார்க்கப்படுகிறது . திமுக வெற்றி பெற்றுவிட்டால் அந்த பழி தன் மீது வந்து விடும் என்பதை மனதில் வைத்து சசிகலா அரசியல் இருந்து விலகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதா 1989லில் எடுத்த முடிவு: நான் அரசியலில் இருந்தே விலகுகிறேன் -வி.கே.சசிகலா

இந்தநிலையில், சசிகலா இல்லாத அமமுகவில் சிலர் கூட்டணி வைக்க முன்வரலாம் என்பதும் கூட அவரது என்னமாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாக இந்த முடிவு டிடிவி.தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். சசிகலாவின் இந்த முடிவு எதிர்காலத்தில் மாறலாம். அத்துடன் அதிமுகவின் எதிர்காலமும் சசிகலாவின் இந்த முடிவினால் தீர்மானிக்கப்படலாம்

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*