டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

63 / 100

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ரவிச்சந்திரனிடம் இருந்து 12 ஆயிரமும் ரூபாய், அவர் டிரைவர் சபரிநாதனிடம் 25,000 ரூபாய், மேற்பார்வையாளர் ராமலிங்கத்திடம் இருந்து 25,000 ரூபாய் என மொத்தம் 62,000 ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்படதாக லஞ்ச ஒழிப்புதுறை போலீஸார் தெரிவித்தனர்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கரூர் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 62,000 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியின் மாவட்டத்திலேயே லஞ்சத்தில் அதிகாரிகள் ஜொளிக்கிறார்கள் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

கரூர் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக அலுவலகத்தில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்லும் மதுபாட்டில் குடோன் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தீபாவளி நெருங்குவதை ஒட்டி அரசு அலுவலகங்களில் பரிசுப் பொருட்கள் லஞ்சப் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

இதையடுத்து, கரூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி நடராஜன், ஆய்வாளர் சாமிநாதன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது, அலுவலகத்தில் இருந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அலுவலர்களிடம் மற்றும் அந்த அலுவலகத்தில் உள்ள பகுதிகளில் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், விசாரணை நடத்தினர்.

சோதனையில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ரவிச்சந்திரனிடம் 12 ஆயிரம் ரூபாய், டிரைவர் சபரிநாதனிடம் 25,000 ரூபாய், மேற்பார்வையாளர் ராமலிங்கத்திடம் 25,000 ரூபாய் என மொத்தமாக கணக்கில் வராத 62,000 ரூபாய் கைப்பற்றப்படதாக லஞ்ச ஒழிப்புதுறை போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், தீபாவளி நெருங்கும் நிலையில் தற்போது, நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையால், பல்வேறு முக்கிய அரசு அலுவலர்கள் கலக்கத்தில் உள்ளனர்களாம்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*