டிடிவிக்கு ஆதரவளித்த மூன்று அதிமுக எம்எல்ஏகள்: அதிமுகவில் வாய்ப்பு கொடுக்கவில்லை..!

டிடிவிக்கு ஆதரவளித்த மூன்று அதிமுக எம்எல்ஏகள்: அதிமுகவில் வாய்ப்பு கொடுக்கவில்லை..!

அதிமுகவுடன் கூட்டணியிலிருந்து பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்தனர். இதில் பாமகவுக்கு 23 தொகுதிகள், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொகுதி உடன்பாடு எட்டப்படாததால் தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது. இந்நிலையில், இன்று 171 வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

டிடிவிக்கு ஆதரவளித்த மூன்று அதிமுக எம்எல்ஏகள்: அதிமுகவில் வாய்ப்பு கொடுக்கவில்லை..!

இதையடுத்து, அதிமுகவிலிருந்து டிடிவி.தினகரன் நீக்கப்பட்ட பிறகு, டிடிவிக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, டிடிவிக்கு ஆதரவாக, கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அவர்கள் திடீரென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்தநிலையில், அடிக்கடி டிடிவி.தினகரன், அதிமுகவில் ஸ்லீப்பர் செல்ஸ் இருப்பதாக தொடர்ந்து கூறிவந்தார்.

டிடிவிக்கு ஆதரவளித்த மூன்று அதிமுக எம்எல்ஏகள்: அதிமுகவில் வாய்ப்பு கொடுக்கவில்லை..!

இந்தநிலையில், டிடிவி.தினகரனுக்கு ஆதரவாளராக அறியப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு, ரத்தினசபாபதி, விருத்தாசலத்தை சேர்ந்த கலைச்செல்வனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர்கள் விருப்பமனு அளித்தும், இவர்களை அதிமுக தலைமை நிராகரித்துள்ளது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*