டிடிவி தினகரனுடன் SDPI கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

டிடிவி தினகரனுடன் SDPI கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

அமமுக சார்பில் ஏற்கனவே ஒவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக SDPI கட்சி நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத்தலைவர் தெஹ்லான் பாக்வி, டிடிவி தினகரனுடன் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சந்திப்பு எதற்காக நடைபெறுகிறது என்ற தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

டிடிவி தினகரனுடன் SDPI கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி 18 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்றத் தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்தார்.

டிடிவி தினகரனுடன் SDPI கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ராஜவர்மன், அதிமுகவில் கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களை, கட்சிக்காக உழைப்பவர்களை வேட்பாளராக அறிவிக்கவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால், எனக்கு போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை எந்தது வேதையளிக்கிறது.

டிடிவி தினகரனுடன் SDPI கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

சசிகலாவிற்கு இவர்கள் செய்த துரோகத்திற்கு மக்கள் மன்றத்தில் உரிய பதில் கிடைக்கும். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதலமைச்சர், துணை முதலமைச்சரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார், ஒருநாள் உண்மை வெளிவரும் என ஆவேசமாக பேசினார். அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*