டிடிவி தினகரனையும் அரசியலில் இருந்து விலகச் சொன்ன சசிகலா : பாஜகவின் சி.டி.ரவி பரபரப்பு பேட்டி!

தினகரனையும் அரசியலில் இருந்து விலகச் சொன்ன சசிகலா : பாஜகவின் சி.டி.ரவி பரபரப்பு பேட்டி!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வரும் அதிமுக, இட ஒதுக்கீடு, விவசாய கடன் தள்ளுபடி, பொதுத்தேர்வு என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்தநிலையில், கூட்டணி அமைத்திருக்கும் பாஜக, தேமுதிக மற்றும் பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையையும் தொகுதி பங்கீடுகளும் நடத்திக் கொண்டிருக்கிறது.

டிடிவி தினகரனையும் அரசியலில் இருந்து விலகச் சொன்ன சசிகலா : பாஜகவின் சி.டி.ரவி பரபரப்பு பேட்டி!

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக, வாக்குகள் சிதறுவதை தடுக்க, சசிகலாவை அதிமுக பக்கம் இழுக்க நிர்பந்தம் போட்டதாம். அவர்களை இணைக்க அதிமுக ஏற்க மறுத்ததால், தற்போது வரை கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இதனிடையே, அரசியலில் இருந்து பின்வாங்கி எல்லாருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தார் சசிகலா.

இந்தநிலையில், டிடிவி தினகரனுக்கே சசிகலாவின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியாகவே இருந்ததாம். இதுமட்டுமில்லாமல், தினகரனையும் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளுமாறு சசிகலா கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இது அதிமுகவுடன் சசிகலா இணைவாரா? அமமுக அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா? போன்ற பல கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளது.

இதையடுத்து, சென்னை தி.நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, சசிகலாவின் இந்த முடிவை பாஜக வரவேற்கிறது. ஜெயலலிதாவின் கனவு ஒருங்கிணைந்த அதிமுக தான். ஜெயலலிதாவின் கனவை அதிமுக-பாஜக கூட்டணி நிறைவேற்றும். டிடிவி தினகரனும் அதை செய்வார் என எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

டிடிவி தினகரனையும் அரசியலில் இருந்து விலகச் சொன்ன சசிகலா : பாஜகவின் சி.டி.ரவி பரபரப்பு பேட்டி!

மேலும், டிடிவி தினகரன், அதிமுக வாக்குகளைப் பிரிப்பார் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இன்னும் காலம் இருக்கிறது என்று பதிலளித்தார். இந்தநிலையில், சி.டி.ரவியின் இந்த பேட்டியாது, அதிமுகவுடன் சசிகலாவும் தினகரனும் இணைப்பதற்கு வாய்ப்பு இருப்பதையே வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*