தங்கும் விடுதியில் விபச்சாரம்: இளம்பெண்கள் மீட்பு.. தங்கும் விடுதிக்கு அதிகாரிகள் பூட்டு!!

67 / 100

தங்கும் விடுதியில் விபசாரம் செய்ய பயன்படுத்திய விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தங்கும் விடுதியில் விபச்சாரம்: இளம்பெண்கள் மீட்பு.. தங்கும் விடுதிக்கு அதிகாரிகள் பூட்டு!!
வாசவி தங்கும் விடுதி

அரியலூர் நகர் பகுதியில் திருச்சி செல்லும் சாலையில் வாசவி லாட்ஜ் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இதனை கீழப்பழூவூரை சேர்ந்த வெற்றிகண்ணன் என்பவர் 6 மாதத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். ( லீசுக்கு ) எடுத்துள்ளார்.

இந்நிலையில், தங்கும் விடுதியை தவறுதலாக விபச்சாரத்திற்கு பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 14-ஆம் தேதி அரியலூர் டிஎஸ்பி மதன் தலைமையிலான போலீசார் நேரடியாக சென்று சோதனை செய்ததில் 4 பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததுள்ளது.

அதன்பிறகு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை தமிழ்நாடு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், தங்கும் விடுதியில் ஏஜெண்டாக வேலைபார்த்து வந்த வெற்றிகண்ணன் மற்றும் தரகராக செயல்பட்ட சேகர் உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து, அந்த தங்கும் விடுதிக்கு சீல் வைக்க மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் அரியலூர் கோட்டாச்சியர் மற்றும் காவல்துறையினர் நேற்று இரவு வாசவி தங்கும் விடுதிக்கு சீல் வைத்தனர்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*