தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்: வால்பாறை காவல் ஆய்வாளர் அதிரடி சோதனை

62 / 100

வால்பாறை அக் 06.,

வால்பாறையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வால்பாறை நகர மற்றும் சுற்றியுள்ள பகுதி கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா, என வால்பாறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்: வால்பாறை காவல் ஆய்வாளர் அதிரடி சோதனை

வால்பாறை நகரில் உள்ள கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா, என வால்பாறை நகர பகுதிகளில் நேற்று போலீசார் சோதனையிட்டனர்.

மேலும், மளிகை கடைகளில், புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்கும் நிலையில், நேற்று போலீசார் திடீரென சோதனை செய்தனர். ஆனால், புகையிலை பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.
இருந்தாலும் போலீசார் திடீரென சோதனை நடத்தியதால் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும்விதமாக இருந்தது.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்: வால்பாறை காவல் ஆய்வாளர் அதிரடி சோதனை

இதுபற்றி வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் கூறுகையில், வால்பாறையிலுள்ள கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படுவார்கள், நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த அதிரடி சோதனையில் வால்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*