தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கு ஏப்.6ம் தேதி சட்டமன்றத் தேர்தல்! : மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம் ..!!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கு ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்!

வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது..

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கு ஏப்.6ம் தேதி சட்டமன்றத் தேர்தல்! : மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம் ..!!!

இந்தநிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை ஆட்சிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிகிறது. இதையடுத்து, 5 மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பணிகளை தீவிரபடுத்தி வருகிறது. சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் ஐந்து மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள், பண்டிகைகள், தேர்வுகள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தேர்தலுக்கான தேதி குறிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பில் சுனில் அரோரா வெளியிட்டார். சுனில் அரோரா கூறியதாவது: தமிழ்நாடு,புதுச்சேரி,கேரளா,மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக காலம் வரும் மே மற்றும் ஜுன் மாதங்களுடன் முடிவடைகிறது. இந்த ஐந்து மாநிலங்களில் மட்டும் 18 கோடி வாக்காளர்கள் உள்ளார்கள்.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் வாக்களிக்க ஏதுவாக, 88 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகிறது. தமிழக தேர்தல் செலவின பார்வையாளராக மதுமாஜன் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டுயிருக்கிறார்கள். அதேபோல், சட்டப்பேரவை தேர்தலுக்கான தமிழக சிறப்பு அதிகாரியாக அலோக் வர்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கு ஏப்.6ம் தேதி சட்டமன்றத் தேர்தல்! : மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம் ..!!!

இந்தநிலையில், தேர்தல் பிரச்சாரம் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் ஆன்லைன் மூலமாக மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில், வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 5 வாகனங்களுக்கு அதிகமாக சென்று பிரச்சாரம் செய்ய அனுமதியில்லை. இதில், வேட்பாளர்களின் குற்றப்பின்னணி தொடர்பாக செய்தித்தாள்கள், ஊடகங்களில் கட்சிகள் விளம்பரங்கள் மூலம் தெரியப்படுத்துவது கட்டாயமாகும்.

தமிழ்நாட்டில் தொகுதிக்கு ஒன்றுக்கு ரூ.30.80 லட்சம் வரை மட்டுமே வேட்பாளர் செலவு செய்ய வேண்டும். மேலும், வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளர் உள்பட 2 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. சிவிஜில்ஆப் மூலம் மக்கள் ஆதாரத்துடன் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து, உடனுக்குடன் புகார் அளிக்கலாம். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்தும் வெப்கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும்.

இதில், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகள் தரைதளத்தில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும். தேர்தல் நடத்தைவிதிகள் 5 மாநிலங்களில், இன்று முதல் அமலுக்கு வருகிறது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*