தமிழகம் முழுவதும் இன்று சலூன் கடைகளை அடைத்து முடிதிருத்துவோர் போராட்டம்!

இன்று தமிழகம் முழுவதும் சலூன் கடைகளை அடைத்து முடிதிருத்துவோர், போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இன்று சலூன் கடைகளை அடைத்து முடிதிருத்துவோர் போராட்டம்!

தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில இணைச்செயலாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார்.

நடைபெற்ற கூட்டத்தில் மருத்துவ சமூகத்தினருக்கு கல்வியும், வேலை வாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடும், சமூக பாதுகாப்பும் வழங்க வலியுறுத்தி சுமார் 5 லட்சம் சலூன் கடைகளை மூடி போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 26ஆம் தேதியான இன்று மாவட்ட தலைநகரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் சலூன் கடைகளை அடைத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கோரிக்கையாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு, தங்களது சமூக மக்களுக்கு தனி சட்ட பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று சலூன் கடைகளை அடைத்து முடிதிருத்துவோர் போராட்டம்!

இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் முடிதிருத்தும் செய்யும் தொழிலாளர்கள் சுமார் 3 ஆயிரம் சலூன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, திருச்சி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் சலூன் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*