தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது. அதிமுக அரசின் பதவிக்காலம் வரும் மே 24ஆம் தேதியோடு முடிவடைவதால், தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதையடுத்து, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை ஆட்சியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் அங்கும் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

இதில், கடந்த ஜனவரி..20ஆம் தேதியில், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இந்தநிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அரசியல் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தநிலையில், கடந்த 24ஆம் தேதி, ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் அட்டவணை மற்றும் முன் தயாரிப்பு பணிகள் குறித்து சுனில் அரோரா தலைமையில் டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது. இதில், எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்துவது? வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது. இதையடுத்து, தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். மேலும் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*