தமிழ்நாடு பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாடு பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 14 தொகுதிகளில் பாஜக, திமுகவுடன் நேரடியாக போட்டியிடுகிறது. அதனால், அவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில், வேட்பாளர் பட்டியலை உருவாக்க தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் டெல்லிக்கு சென்றார்.

தமிழ்நாடு பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

இதையடுத்து, கடந்த 3 நாட்களாகவே வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்தநிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில், இன்று அதிகாலை வரை விடியவிடிய நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், ஒரு வழியாக வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு விட்டது. இந்தநிலையில், பாஜக தலைமை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அதில், தாராபுரம் தொகுதியில் எல்.முருகன், காரைக்குடி தொகுதியில் ஹெச் ராஜா, அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசன், ஆயிரம்விளக்கு தொகுதியில் குஷ்பு, நாகர்கோவில் தொகுதியில் M.R.காந்தி ஆகியோர் பாஜக வேட்பாளர்களாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

பா.ஜ.க கட்சி போட்டியிடும் 20 தொகுதிகளில் முதற்கட்டமாக 17 தொகுதி வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜ.க தேசியச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டார்.

தாராபுரம் தனித் தொகுதியில் எல்.முருகன், காரைக்குடியில் எச்.ராஜா, ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பூ, அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை, கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி, துறைமுகம் தொகுதியில் வினோஜ் செல்வம், திருவண்ணாமலை தொகுதியில் தனிகைவேல், திருக்கோவிலூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ கலிவரதன், மொடக்குறிச்சி தொகுதியில் சி.கே.சரஸ்வதி, திருவையாறு தொகுதியில் பூண்டி வெங்கடேசன், மதுரை வடக்கு தொகுதியில் தற்போது தி.மு.க எம்.எல்.ஏவாக இருக்கும் சரவணன், விருதுநகர் தொகுதியில் பாண்டுரங்கன், ராமநாதபுரம் தொகுதியில் குப்புராம், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், குளைச்சல் தொகுதியில் ரமேஷ், திட்டக்குடி தொகுதியில் டி.பெரியசாமி’ ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளரும் வேட்பாளரும்
உங்கள் வேங்கை வெற்றியில் விரைவில்

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*