தலைவர் என்னை போ..போ… என்றார்; நேர்காணலில் உள்ளே இதுதான் நடந்தது –உதயநிதி

தலைவர் என்னை போ..போ... என்றார்; நேர்காணலில் உள்ளே இதுதான் நடந்தது –உதயநிதி
தலைவர் என்னை போ..போ... என்றார்; நேர்காணலில் உள்ளே இதுதான் நடந்தது –உதயநிதி

திமுக நான்கு நாட்களாக நேர்காணல் நடத்தினாலும் கிளைமேக்ஸ் தான் ஹைலைட். நேர்காணலின் கடைசி நாளில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.

இந்தத் தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு கொடுத்திருந்தார். அவரும் நேர்காணலுக்குச் சென்றார். இது தொடர்பான ஒரு புகைப்படமும் வெளியாகி இணையத்தைக் கலவர பூமியாக்கியது. உள்ளே என்ன நடந்திருக்கும் என்பதை யூகங்களாகவே சொல்லப்பட்டன. உண்மையில் அங்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது.

தலைவர் என்னை போ..போ... என்றார்; நேர்காணலில் உள்ளே இதுதான் நடந்தது –உதயநிதி

தற்போது அந்த உண்மையைப் போட்டு உடைத்துள்ளார் உதயநிதி. செய்தியாளர்களுக்கு உதயநிதி அளித்த பேட்டியில், திமுகவின் நேர்காணல் குறித்து, ஒவ்வொரு பத்திரிகையிலும் நேர்காணலில் உள்ளே இருந்து பார்த்தவர்கள் மாதிரியே எழுதுகிறார்கள். ஆனால், அதில் எதுவுமே உண்மையே இல்லை. உள்ளே என்ன நடந்தது என்பதை நானே தெளிவுப்படுத்தி விடுகிறேன். முதலில் நான் நேர்காணலுக்கு வரமாட்டேன் என்றுதான் நினைத்தார்கள்.

தலைவர் என்னை போ..போ... என்றார்; நேர்காணலில் உள்ளே இதுதான் நடந்தது –உதயநிதி

ஆனால், நான் உள்ளே சென்றதும் அவர்களுக்கு ஆச்சரியமாகிவிட்டது. உள்ளே சென்றவுடன் மாமா டிஆர்.பாலு என்னை பார்த்தார். அவரை எப்போதும் நான் மாமா என்றுதான் கூப்பிடுவேன். அவரிடம் சொல்லுங்க மாமா என்றேன். அவர் என்னிடம் நீ எதுக்கு இங்க வந்திருக்கனு கேட்டார். நான் சிரித்தேன். நேரா சேப்பாக்கம் தொகுதிக்கு போய் வேலையை பாரு என்றார். இதைத்தொடர்ந்து இன்னொரு பக்கம் ஆ.ராசா, நீ எவ்வளவு செலவு செய்வாய் என்று கேட்டார். தலைவர் என்ன சொன்னாலும் சரி. நீதான் சேப்பாக்கம் வேட்பாளர் என்று அவர் கூறினார்.

தலைவர் என்னை போ..போ... என்றார்; நேர்காணலில் உள்ளே இதுதான் நடந்தது –உதயநிதி

இருந்தாலும் நான் தலைவரின் சொல்லுக்காக காத்திருந்தேன். ஆனால் தலைவர் என்னை போ..போ…, போய் 234 தொகுதியிலும் சுத்திட்டு வா என்று கூறினார். இதையடுத்து, என்னை எங்கே நிற்க வைத்தாலும் சரி… அல்லது வேறு யாரை நிற்க வைத்தாலும் சரி, நான் திமுகவிற்காக கடுமையாக உழைப்பேன் என்றேன்.

திமுகவிற்காக யார் அங்கு போட்டியிட்டாலும் நான் வாக்கு கேட்பேன். எனக்கு எம்எல்ஏ ஆக வேண்டுமென்று ஆசை எல்லாம் இல்லை. ஆனால், சேப்பாக்கத்தில் போட்டியிட ஆசைப்படுகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட கவலையில்லை. இந்த தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக மட்டுமே உழைப்பது, இப்போது என்னுடைய ஒரே குறிக்கோளும் அதுதான் என்று கூறினேன் என்றார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*