தாஜ் மஹாலின் பெயர் ராம் மஹால் என மாற்றப்படும்: பாஜக எம்எல்ஏ

இந்தியாவில் இருக்கும் வடமாநிலங்களைப் பொறுத்தவரையில், முகலாயர்களின் நினைவாக ஏராளமான நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன. குறிப்பாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தியாவின் அதிசயங்கள் ஒன்றான தாஜ் மஹால் இருக்கிறது. முகலாய பேரரசர் ஷாஜகான், தன் மனைவியின் நினைவாக எழுப்பிய நினைவுச் சின்னமாக தாஜ் மஹால் இருக்கிறது.

தாஜ் மஹாலின் பெயர் ராம் மஹால் என மாற்றப்படும்: பாஜக எம்எல்ஏ
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

அப்படிப்பட்ட நினைவுச் சின்னமான இந்த தாஜ்மஹாலின் பெயர் ராம் மஹால் என்று மாற்றப்படும் என பாஜக எம்எல்ஏ ஒருவர் கூறியிருப்பது, பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. பைரா தொகுதி எம்எல்ஏவான சுரேந்திர சிங், தாஜ் மஹால் இருந்த இடத்தில் ஏற்கெனவே, இந்துக் கடவுளான சிவன் கோயில் இருந்ததாகவும், ஷாஜகான் அதை இடித்துவிட்டு, தாஜ் மஹாலை கட்டியதாகவும் கூறியிருக்கிறார். ஆகவே, ஆக்ராவின் நினைவுச் சின்னமான தாஜ் மஹாலுக்கு, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விரைவில் வேறு பெயரைச் சூட்டுவார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

தாஜ் மஹாலின் பெயர் ராம் மஹால் என மாற்றப்படும்: பாஜக எம்எல்ஏ

சுரேந்தர் சிங் இவ்வாறு சர்ச்சையாகப் பேசுவது இது முதல் முறையல்ல. 2018-ஆம் ஆண்டே அவர் இப்படி பேசியிருக்கிறார். இந்தியாவிலுள்ள அனைத்து முகலாய நினைவுச் சின்னங்களுக்கும் வேறு பெயர் சூட்ட வேண்டும் என்றார். அதுமட்டுமில்லாமல் முகலாய அரசர்களின் பெயர்களை வைத்தால், அந்த இடம் நாறுவதாகவும், வேறு பெயர் சூட்டினால் அந்த இடம் வசந்தமாக இருப்பதாகவும் கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.

தாஜ் மஹாலின் பெயர் ராம் மஹால் என மாற்றப்படும்: பாஜக எம்எல்ஏ
சுரேந்திர சிங் எம்எல்ஏ

இந்த சிந்தனையெல்லாம், யோகி ஆதித்யநாத்திடமிருந்து தான் வந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ஆக்ராவிலுள்ள ஒரு முகலாய அருங்காட்சியகத்துக்கு சத்ரபதி சிவாஜி பெயரை யோகி மாற்றினார். அதேபோல், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முக்கிய மாவட்டங்களான அலகாபாத், ஃபைசாபாத்துக்கு முறையே பிரக்யராஜ், அயோத்யா என பெயர் மாற்றினார்.

தாஜ் மஹாலின் பெயர் ராம் மஹால் என மாற்றப்படும்: பாஜக எம்எல்ஏ

அதேபோல், ஆக்ரா விமான நிலையத்திற்கு, தீன்தயாள் உபத்யாய் என்றும், உருது பஜாருக்கு, இந்தி பஜார் என்றும், அலி நகருக்கு ஆர்யா நகர் என்றும் பெயர் மாற்றம் செய்து பரபரப்பைக் கிளப்பினார். இதனால், கூடிய விரைவில் தாஜ் மஹாலுக்கு ராம் மஹால் என்று பெயர் மாற்றம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*