தா.பாண்டியன் காலமானார் என்ற செய்தி வெறும் வதந்தி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்கள் காலமானார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. அந்த செய்தி உண்மையல்ல வெறும் வதந்தி. தா.பாண்டியனுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தா.பாண்டியன் காலமானார் என்ற செய்தி வெறும் வதந்தி

இந்தநிலையில், தா.பாண்டியனுக்கு, கடந்த 10 ஆண்டுகளாகவே சிறுநீர பிரச்சனையால் டயாலிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். இந்தநிலையில், திடீரென்று நேற்று, அவருக்கு சிறுநீரக பாதிப்பு அதிகமானது. இதையடுத்து, அவருக்கு ரத்த அழுத்தமும் அதிகரித்ததால் தா.பாண்டியனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றது.

இதனால், உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது, அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமில்லை என்று அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது

இந்தநிலையில், சற்றுமுன் தா.பாண்டியன் காலமானதாக செய்திகள் வெளிவந்தன தகவலை உறுதிப்படுத்தும் வகையில் தொல்.திருமாவளவனும் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து இருந்தார்.

தா.பாண்டியன் காலமானார் என்ற செய்தி வெறும் வதந்தி

ஆனால், தற்போது அந்த ட்விட்டர் செய்தி நீக்கப்பட்டிருக்கிறது. தற்போதுவரை தா.பாண்டியன் எந்தவித முன்னேற்றமுமின்றி சிகிச்சையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*