திமுகவின் இரண்டாவது எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்தார்!

திமுகவின் இரண்டாவது எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்தார்!

திருப்பரங்குன்றம் தொகுதியில் மீண்டும் போட்டியிட மருத்துவர் சரவணன் எம்.எல்.ஏ விருப்பமனு கொடுத்துள்ளார். ஆனால், திருப்பரங்குன்றம் தொகுதி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது.

திமுகவின் இரண்டாவது எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்தார்!

திருப்பரங்குன்றம் திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் டாக்டர் சரவணன். தெப்போது திமுகவிலிருந்து விலகி, பாஜக மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏவாக இருந்து வருபவர், மருத்துவர் சரவணன். ஏழைஎளிய மக்களுக்கு, இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதாலும், சமூக சேவையிலும் ஈடுபட்டு மக்களிடையே நன்மதிப்பை பெற்றவர்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மருத்துவர் சரவணனுக்கு, இம்முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு திமுக வழங்கவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமனு கொடுத்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பரங்குன்றம் தொகுதி ஒதுக்கியது திமுக.

திமுகவின் இரண்டாவது எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்தார்!

இதையடுத்து, மருத்துவர் சரவணன் திமுக மூத்த தலைவர்களிடையே அபிமானத்தை இழந்ததாலும், அந்தத் தொகுதியில் கோஷ்டி மோதல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும், இந்தமுறை திருப்பரங்குன்றம் தொகுதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலுக்கட்டாயமாக கொடுக்கப்பட்டிருப்பதாக, தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றனர்.

வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியை சரவணன் பத்திரிகையாளர்களிடையே வெளிப்படுத்திய நிலையில், இன்று அவர் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்தநிலையில், தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்திற்கு வருகை தந்த சரவணன், தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

திமுகவின் இரண்டாவது எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்தார்!

ஏற்கெனவே, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம், அதிகாரப்பூர்வமாக பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது, சரவணன் சட்டமன்ற உறுப்பினரும் பாஜகவில் இணைந்துள்ளதால், திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு முன்னர், மதிமுகவில் இருந்த சரவணன், பின்னர் பாஜகவிலும், அங்கிருந்து திமுகவிற்கும், தற்போது மீண்டும் பாஜகவிலேயே இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்காளரும் வேட்பாளரும்
உங்கள் வேங்கை வெற்றியில் விரைவில்

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*