திமுகவின் நேர்காணல்: அப்பாவி தொண்டனுக்கு இருட்டுக்கடை அல்வா

திமுகவின் நேர்காணல்: அப்பாவி தொண்டனுக்கு இருட்டுக்கடை அல்வா

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்க திமுகவின் விருப்பமனு கடந்த 17ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து 28ஆம் தேதிவரை நடைபெற்றது.

இதில், 8,388 விருப்பமனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன. 7,967 விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில், சுமார் 7,000 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திமுகவின் நேர்காணல்: அப்பாவி தொண்டனுக்கு இருட்டுக்கடை அல்வா

மார்ச் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரையிலும், மாவட்ட வாரியாக பிரித்து நேர்காணல் நடைபெறுகிறது. மார்ச் 2ஆம் தேதி காலை 8 மணிக்கு கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு. தூத்துக்குடி வடக்கு, தெற்கு. திருநெல்வேலி கிழக்கு, மத்திய. தென்காசி வடக்கு,தெற்கு. ராமநாதபுரம் ஏரியாவும். மாலை 4 மணி விருதுநகர் வடக்கு, சிவகங்கை தெற்கு. தேனி வடக்கு, தெற்கு. திண்டுக்கல் கிழக்கு, மேற்கு ஏரியாவில் இருந்து விருப்பமனு கொடுத்தவர்களுக்கும் நேர்காணல் நடைபெற்றது.

திமுகவின் நேர்காணல்: அப்பாவி தொண்டனுக்கு இருட்டுக்கடை அல்வா

மேலும், மார்ச் 3 புதன் காலை 9 மணிக்கு தொடங்கிய நேர்காணல் மதுரை வடக்கு, தெற்கு. மதுரை மாநகர், வடக்கு, தெற்கு. நீலகிரி, ஈரோடு வடக்கு,தெற்கு. அன்று மாலை 4 மணி திருப்பூர் மத்திய, வடக்கு. திருப்பூர் கிழக்கு,தெற்கு. அதேபோல், கோவை கிழக்கு, வடக்கு, தெற்கு. கோவை மாநகர் கிழக்கு, மேற்கு. கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது.

இன்று மார்ச் 4ஆம் தேதி வியாழன் காலை 9 மணிக்கு தருமபுரி கிழக்கு, மேற்கு. நாமக்கல் கிழக்கு, மேற்கு. சேலம் கிழக்கு, மேற்கு. மத்திய புதுக்கோட்டை வடக்கு, தெற்கு. அன்று மாலை 4 மணிக்கு நடக்கும் நேர்காணலில் கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு. திருவாரூர், நாகை வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளுக்கும்,

மார்ச் 5 ஆம் தேதி காலை 9 மணிக்கு தஞ்சை வடக்கு, தெற்கு. மத்திய கடலூர் கிழக்கு, மேற்கு. கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு. விழுப்புரம் வடக்கு, மத்தியம். மாலை 4 மணி திருவண்ணாமலை வடக்கு, தெற்கு. வேலூர் கிழக்கு, மேற்கு. மத்திய காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளுக்கும்,

திமுகவின் நேர்காணல்: அப்பாவி தொண்டனுக்கு இருட்டுக்கடை அல்வா

மார்ச் 6ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு திருவள்ளூர் கிழக்கு,மத்திய,மேற்கு. மேலும், சென்னை வடக்கு, வடகிழக்கு, சென்னை கிழக்கு, தெற்கு. தொடர்ந்து, சென்னை மேற்கு, தென்மேற்கு. அன்று மாலை 4 மணிக்கு புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெற இருக்கிறது.

திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணலை, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் தேர்வு செய்து வருகின்றனர்.

திமுகவின் நேர்காணல்: அப்பாவி தொண்டனுக்கு இருட்டுக்கடை அல்வா

இந்தநிலையில், திருச்சிக்கு இன்றைக்குத்தான் நேர்காணல் நடைபெற இருக்கும் நிலையில், சில தினங்களுக்கு முன்னதாகவே நேருவின் மகன் போட்டியிடுவதாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நேருவின் மகன் என்பதால் அதில் மாற்றம் இருக்காது என்றும் பேசப்படுகிறது.

இப்படிப்பட்ட தேர்வுக்கு, இதற்கு எதற்கு விருப்பமனு நேர்காணல் நாடகமெல்லாம். அப்பாவி தொண்டனுக்கு நேர்காணல் அல்வா கொடுக்கிறார்கள். நேருவின் மகனை போல இன்னும் பலர் இங்கு ஆளப்பிறந்தவர்கள், திமுகவின் அடிமட்ட தொண்டன் மட்டும் என்றுமே கொத்தடிமையாகவே இருக்கவேண்டும். திமுகவின் தொண்டர்களே, இனியாவது விழிப்போடு இருங்கள் என்கிறார் தமிழக பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*