திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது – கனிமொழி எம்.பி

60 / 100

திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை தற்போது திமுக அரசு நிறைவேற்றி வருவதாக கனிமொழி திமுக எம்.பி தெரிவித்தார்.

திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது – கனிமொழி எம்.பி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 500 வாக்குறுதிகளை திமுக கொடுத்திருந்தது. அதில் முக்கியமான பல வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியுள்ளது. அதில் மகளிருக்கு பேருந்தில் இலவசம், ஆவின் பால் விலை குறைப்பு, பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு, கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுவரை 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனை விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றுவது போல் தெரியவில்லை. திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது. நிறைவேற்றிய திட்டங்களை பட்டியல் போட்டு காட்டுங்கள் என தெரிவித்திருந்தார். இவ்வாறு திமுகவின் வாக்குறுதிகள் குறித்து விமர்சனங்கள் எழுந்துவந்தநிலையில், திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக கனிமொழி திமுக எம்பி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது – கனிமொழி எம்.பி

இதையடுத்து, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் நிவாரண நிதியாக, கொரோனா நிவாரண நிதி 4,000 ரூபாய் குடும்ப அட்டையுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது. பெண்கள் பேருந்துகளில் கட்டணமின்றி செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி இருக்கிறார்.

இந்தநிலையில், ரூபாய் 11 கோடியை இந்தப்பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதேபோல், கடையம் பகுதியில் கல்லூரி அமைக்க 14 கோடி அறநிலையத்துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்றும் கனிமொழி எம்பி கேட்டுக்கொண்டார்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*