திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. திமுக இந்த தேர்தலில் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின், காட்பாடியில் துரைமுருகன் போட்டியிடுகிறார்கள்.

திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடுகள், வேட்பாளர் பட்டியல் என அனைத்தும் நிறைவடைந்தது. நேற்று ஒரே கட்டமாக 173 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் 40 வேட்பாளர்கள் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

இந்நிலையில், திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில், இன்று தேர்தல் அறிக்கை வெளியீடப்பட்டுள்ளது.

திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசை வற்புறுத்துவோம்

கடும் ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள அதிமுக அமைச்சர்களை விசாரணை நடத்த தனி நீதிமன்றம் அமைக்கப்படும்

முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் தனித்துறை உருவாக்கப்பட்டு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின் கீழ், பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறை கேட்கும் முகாம்கள் நடத்தப்படும்.

சட்டமன்ற நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

பொங்கல் திருநாள், மாபெரும் பண்பாட்டு திருநாளாக, மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும்.

சொத்துவரி அதிகரிக்கப்படாது.

அரிசிஅட்டை உள்ள குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக 4000 ரூபாய் வழங்கப்படும்.

ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.

பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் விலை குறைக்கப்படும்.

பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலை திட்டம் உருவாக்கப்படும்.

நியாயவிலைக் கடைகளில் மாதம் ஒருகிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்.

சட்டம் ஒழுங்கை காக்கும் பணியின்போது, உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு உதவித்தொகையாக ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.

பெண்களுக்கான சைபர் குற்றங்களை கண்காணிக்க கலைஞர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.

குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக்கும் சிறப்பு வீட்டுவசதி திட்டம் கொண்டு வரப்படும்.

நகர்ப்புறங்களில் குடியிருப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*