திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: என்னதான் சிறப்பு

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: என்னதான் சிறப்பு

சட்டமன்ற தேர்தலுக்கான, திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலின், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: என்னதான் சிறப்பு

அதற்கும் முன்னதாக, சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்று அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை.

அனைத்து தொகுதிகளிலும் மக்கள் குறைகேட்பு புகார் மாதம்தோறும் நடத்தப்படும்.

‘பொங்கல்’ மாபெரும் பண்பாட்டு நாளாக கொண்டாடப்படும்.

ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.

பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும்.

சத்துணவு அங்கன்வாடி அரசுப்பணியாளர்களாக மாற்றப்படும்.

தமிழ்நாடு ஆறு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: என்னதான் சிறப்பு

பத்திரிகையாளர்ககுக்கு தனி ஆணையம் , ஓய்வூதியம் உயர்த்தப்படும்.

நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கூட்டத்தொடரில் சட்டம் நிறைவேற்றப்படும்.

வேலையில்லா பட்டதாரிகள் தொழில் தொடங்க 20லட்சம் கடனுதவி வழங்கப்படும்.

கனிமங்கள் தனி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும்.

திருச்சி, சேலம், கோவை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம்.

கல்வியை மாநிலப் பட்டியலில் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

பழங்குடியின பட்டியலில் மீனவ சமுதாயம் சேர்க்கப்படும்.

ஏழைஎளிய மக்களின் பசியைபோக்க, 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும்.

சொத்துவரி அதிகரிக்கபடாது.

மகப்பேறு விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்படும்.

அதிமுக அரசால் ஏற்பட்டியிருக்கும் கடன் சுமையை குறைக்க அதற்கான பொருளாதார குழு அமைக்கப்படும்.

சென்னை பெருநகர் வெள்ளத்தடுப்பு குழு ஏற்படுத்தப்படும்.

இயற்கை வேளாண்மைக்கு தனி பிரிவு ஏற்படுத்தப்படும்.

அரசுபள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு, கட்டணமில்லா பயணம் ஏற்பபாடும்.

புகழ்பெற்ற இந்து தலங்களுக்கு செல்ல மாணியம்.

கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: என்னதான் சிறப்பு

மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.

கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்த தவித்த அரிசி அட்டை தாரர்களுக்கு 4000 வழங்கப்படும்.

சமையல் எரிவாயுவுக்கு ரூ. 100 மானியம் வழங்கப்படும்

மின் கட்டணம் மாதாமாதம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும்.

பெண்களுக்கான சைபர் குற்றங்களை கண்காணிக்க கலைஞர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.

சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் குழாய் மூலம் குடிதண்ணீர் வழங்கப்படும்.

இந்து ஆலயங்களில் புணரமைக்க 1000 கோடி ஒதுக்கப்படும். என்பன உள்ளிட்ட முக்கிய அறிவிப்புள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்துவதற்கு ‘திட்டங்கள் செயலாக்கத்துறை’ என்ற தனி துறை அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய அவிறிப்புகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வாக்காளரும் வேட்பாளரும்

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*