திமுக மீனவர் அணி செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்?

62 / 100

ராமநாதபுரம் மாவட்ட திமுக மீனவர் அணி செயலாருக்கு சொந்தமான இடங்களில் நேற்று இரவு அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. நேற்று நடத்தப்பட்ட சோதனையில் முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

திமுக மீனவர் அணி செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்?

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தை சேர்ந்த வில்லாயுதம் என்பவர் அரிய வகை கடல் அட்டை, கடல் குதிரை போன்ற கடல் உயிரினங்களை வெளிநாட்டில் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இவர் திமுக மீனவர் அணி செயலாளராக உள்ளார். மீன் நிறுவனம், உணவகம் என பல தொழில்களை செய்து வரும் இவர், அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டை, கடல் குதிரை போன்ற கடல் உயிரினங்களை கடத்தியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்தநிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் உள்ள அவருடைய வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் சோதனை நடத்தினர். மேலும் அவர் நடத்தும் தங்கும் விடுதி, மீன் கம்பெனியிலும் சோதனை நடத்தப்பட்டது.

நேற்று இரவு வரை நீடித்த சோதனையில் வருவாய் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், அரசுக்கு வரி செலுத்தாமல் பல கோடி ரூபாய் சொத்துக்கள் குவித்த ஆவணங்கள் கைப்பறதாக கூறப்படுகிறது. சிறையில் இருக்கும் வில்லாயுதம் உடல் நலக்குறைவால் தற்போது சிறைத்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக மீனவர் அணி செயலாளராக வலம் வரும் வில்லாயுதம் மீது, பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வில்லாயுதத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதால் ராமநாதபுர மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*