தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

68 / 100

வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 8 மணி முதல் இரவு 7 மணி அத்தியாவசிய பொருட்கள் நியாயவிலை கடைகளில் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகை வரும் நவம்பர் 5-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து, நியாயவிலை பொருட்களை ஏழை, எளிய மக்களும் பெற்று பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் நோக்கில், முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, நவம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரையில் ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி அத்தியாவசிய பொருட்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ கடந்த 11ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில்‌ மாண்புமிகு உணவுத்‌ துறை அமைச்சர்‌ அவர்களால்‌ வழங்கப்பட்ட அறிவுரைகளின்‌படி தீபாவளி 2021 பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களும்‌ பயன்பேறும்‌ வகையில்‌ நவம்பர்‌ 2021 மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ முழுமையாக முடிக்க வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டது.

மேலும்‌, நவம்பர் 01,02 மற்றும்‌ 03 ஆகிய தேதிகளில் நியாயலிலைக்‌ கடைகள்‌ காலை 8 மணி முதல்‌ மாலை 7 மணி வரை திறக்கப்பட வேண்டும்‌ எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உணவு மற்றம்‌ உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர்‌ அவர்களால்‌ வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி சிறப்பு அத்தியாவசியப்‌ போருட்கள்‌ நவம்பர்‌ மாதத்திற்கான அதிகபட்சமாக முன்நகர்கினை முழுமையாக முடிக்கப்பட வேண்டும்‌ எனவும்‌, மேலும்‌, நவம்பர் 01,02 மற்றும்‌ 03 ஆகிய தேதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள்‌ காலை 8 மணி ருதல்‌ மாலை 7 மணி, வரை திறந்து குடும்ப ‌அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்‌ வழங்கப்படுவதை‌ உறுதிசெய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*