தேமுதிக கேட்ட 117 தொகுதிகள், துணை முதல்வர் பதவி: பின்வாங்கிய டிடிவி.தினகரன்

தேமுதிக கேட்ட 117 தொகுதிகள், துணை முதல்வர் பதவி பின்வாங்கிய டிடிவி.தினகரன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக தொடங்கியுள்ளனர். ஆனால், அதிமுக கூட்டணியிலிருந்த தேமுதிக தனித்து விடப்பட்டுள்ளது. வி.கே.சசிகலா விடுதலையாகி சென்னை வந்த வந்ததும் அவருக்கு தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து கூறினார்.

தேமுதிக கேட்ட 117 தொகுதிகள், துணை முதல்வர் பதவி: பின்வாங்கிய டிடிவி.தினகரன்

இது அதிமுக தரப்பில் கடுப்பைக் கிளப்பியது. மேலும், அவரது தம்பி சுதீஷும், நாங்கள் ஒன்றும் கூட்டணிக்காக அலையவில்லை. அதிமுகதான் கூட்டணி வைக்க எங்கள் பின்னால் வருகிறார்கள் என்று கூறினார். இதனால், கடுப்பான அதிமுக தலைமை, தேமுதிகவை புறந்தள்ளியது. பாமகவிற்கு 23 தொகுதிகள், பாஜகவுக்கு 20 தொகுதிகள் அளித்து, தேமுதிகவை வெறுப்பேற்றியது அதிமுக. இதனால், அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக தேமுதிக அறிவித்தது. அத்துடன் கே.பி.முனுசாமி தலையீடுதான் இந்த அளவிற்கு எங்களை கொண்டு வந்து விட்டுள்ளது என்றும் அவர் பாமகவின் ஸ்லீப்பர் செல் என்றும் குற்றம்சாட்டினர்.

தேமுதிக கேட்ட 117 தொகுதிகள், துணை முதல்வர் பதவி: பின்வாங்கிய டிடிவி.தினகரன்

சரியென்று திமுக கூட்டணிக்கு செல்லலாம் என திட்டமிட்ட தேமுதிகவிற்கு, ஆரம்பத்திலேயே தடைபோட்டார் ஸ்டாலின். அத்துடன் கமலின் தன் கூட்டணிக்கு அழைத்தார். தேமுதிக செல்ல மறுத்தது. அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், 117 தொகுதிகள், துணை முதல்வர் நாற்காலி டீல் பேசியதால் டிடிவி.தினகரனும் பேக் அடித்துள்ளார். இதனால், அரசியலில் தனித்து விடப்பட்டுள்ளது தேமுதிக.

தேமுதிக கேட்ட 117 தொகுதிகள், துணை முதல்வர் பதவி: பின்வாங்கிய டிடிவி.தினகரன்

முன்னதாக பிரபல நாளிதழில் வெளியிடப்பட்ட தேமுதிக தொண்டர் ஒருவர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், அற்பத் தொகைக்காக அரிய பொருளை அடகு வைப்பது போல, நீங்கள் இந்தக் கட்சியை அடகுப் பொருளாக்கி விட்டீர்கள்! எங்களை எப்போது அழைக்கப் போகிறீர்கள்? எங்களை உடனடியாக அழையுங்கள், காலதாமதம் செய்யாதீர்கள் என்று நித்தம்..நித்தம்… நீங்கள் அதிமுகவை வேண்டுவது கண்டு, நாங்களெல்லாம் புழுங்கிச் சாகிறோம்.

தேமுதிக கேட்ட 117 தொகுதிகள், துணை முதல்வர் பதவி: பின்வாங்கிய டிடிவி.தினகரன்

கேப்டன் விஜயகாந்த் ஆரம்பித்த கட்சிக்கு இந்த அவல நிலைதேவையா? என்று வாய்விட்டு அழமுடியாத நிலையில், நாங்கள் உள்ளுக்குள் குமுறி அழுதுக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், கேப்டன் கட்சியை, எச்சில் இலை எப்போது வெளியே வந்து விழும் என்று எங்கள் நாக்கைத் தொங்கப் போட்டுக் காத்துக் கொண்டிருக்கும் எங்களை பிராணி நிலைக்கு கீழே தள்ளி விட்டு விட்டீர்களே!. பாமக தலைவரை அதிமுக அமைச்சர்கள் இதுவரை ஓடி ஓடி பலமுறை சந்தித்துள்ளனர். இதைவிட கொடுமை நோட்டாவைவிட, தமிழ்நாட்டில் ஓட்டு வாங்கமுடியாத பாஜக தலைவரை, மதுரைக்குத் தேடிச் சென்று பார்க்கிறார்கள்.

தேமுதிக கேட்ட 117 தொகுதிகள், துணை முதல்வர் பதவி: பின்வாங்கிய டிடிவி.தினகரன்

2011ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கேப்டனுக்காகக் காத்திருந்து, தேர்தல் உடன்பாடு கொண்ட ஜெயலலிதா, சட்டமன்றத்தில், விவாதம் ஒன்றில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், கேப்டனுக்கும் இடையே வாக்குவாதம்முற்ற, ஆளும் கட்சியினர் கேப்டனை நோக்கி சப்தமிட, கேப்டன் ஜெயலலிதா முன்னிலையிலேயே எழுந்து, நாக்கைத் துருத்தி அதிமுகவினரை எச்சரித்ததும், அவையை விட்டு கேப்டன் உட்பட அனைவரையும் வெளியேற்றுமளவிற்கு காரசார விவாதத்தை நடத்தினார். அந்த கட்சிக்கா இந்த ஈனநிலை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கேப்டன் நல்ல உடல்நிலையோடு இருந்திருந்தால், அதனை ஏற்றிருப்பாரா? தலைவர் கேப்டனின் தலைமையில் தலைநிமிர்ந்து நின்ற கட்சி தேமுதிக, இப்போது ஏற்பட்டுள்ள கேவலநிலை தேவையா? நீங்கள் மேற்கொள்ளுகிற ஒவ்வொரு நிலைகளும் தலைவர் கேப்டனுக்கு மட்டுமல்ல; எங்களையும் தலைகுனிய வைத்துள்ளது. தனது பெயரை உண்மையுள்ள, கேப்டனின் அபிமானி என்று எழுதியுள்ளார்.

தேமுதிக கேட்ட 117 தொகுதிகள், துணை முதல்வர் பதவி: பின்வாங்கிய டிடிவி.தினகரன்

தேமுதிகவின் மேல்மட்ட தலைவர்கள் எடுத்த தெளிவற்ற அரசியல் முடிவுகள், தேமுதிகவை அதளபாதாளத்திற்கு தள்ளிவிட்டது என்பது இந்த கடிதம் மூலமும், தற்போது நடைபெறும் நிகழ்வுகள் மூலமும் தெளிவாக நமக்கு தெரியவருகிறது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*