தேர்தல் விதிகள் : தனிப்பட்ட முறையில் மக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள தடை –மாவட்ட ஆட்சியர்

தேர்தல் விதிகள் : தனிப்பட்ட முறையில் மக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள தடை –மாவட்ட ஆட்சியர்

2021 சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருப்பதால், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள காரணத்தால், தனிப்பட்ட முறையில் மக்கள் யாரும் துப்பாக்கி வைத்துக்கொள்ள தடை உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிகள் : தனிப்பட்ட முறையில் மக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள தடை –மாவட்ட ஆட்சியர்

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்திருப்பதாவது;- தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால், கோவை மாவட்டம் புறநகர் பகுதியில் துப்பாக்கிக்கான உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் உரியதாரர்கள் தங்களது துப்பாக்கிகளை அருகில் காவல் நிலையத்திலோ, அங்கீகாரம் பெற்ற பாதுகாப்பு கிடங்கிலோ தவறாது இருப்பு வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தேர்தல் விதிகள் : தனிப்பட்ட முறையில் மக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள தடை –மாவட்ட ஆட்சியர்

துப்பாக்கி உரியதாரர்கள் அனைவரும் துப்பாக்கிகளை இருப்பு வைத்துவிட்டார்களா? என்பதை உறுதிப்படுத்துமாறு மாவட்ட காவல் துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில காவல் பணியில் உள்ளவர்களுக்கும், வங்கித்துறையில் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ளும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களுக்கும் துப்பாக்கி வைத்திருப்பதற்கு இத்தடை உத்தரவிலிருந்து விலக்களிக்கப்படுகின்றது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*