நள்ளிரவில் கோவை மாநகராட்சி பொறியாளர் வீட்டை திமுகவினர் முற்றுகை !

நள்ளிரவில் கோவை மாநகராட்சி பொறியாளர் வீட்டை திமுகவினர் முற்றுகை !

கோவையில் 5 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பதுக்கி வைத்திருப்பாககூறி, கோவை மாநகராட்சி பொறியாளர் வீட்டை நள்ளிரவில் திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நள்ளிரவில் கோவை மாநகராட்சி பொறியாளர் வீட்டை திமுகவினர் முற்றுகை !

கோவை மாநகராட்சியில் நகரமைப்பு பொறியாளராக பணிபுரிந்து வருபவர் லட்சுமணன். இவர் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இதையடுத்து, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, லட்சுமணன் வீட்டில் 5 கோடி ரூபாய் பணம் வைத்திருப்பதாக நேற்றிரவு தகவல் வெளியானது. இதனால், நள்ளிரவில் 50க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள், பொறியாளர் லட்சுமணன் வீட்டை சூழ்ந்து கொண்டனர்.

நள்ளிரவில் கோவை மாநகராட்சி பொறியாளர் வீட்டை திமுகவினர் முற்றுகை !

இதையடுத்து, தகவலின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த பொறியாளர் லட்சுமணனின் காரை சோதனையிட்டனர். அதில், பணம் எதுவும் கிடைக்கவில்லை. இந்தநிலையில், வீட்டின் உள்ளே சென்று சோதனை நடத்தக்கோரி திமுகவினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நள்ளிரவில் கோவை மாநகராட்சி பொறியாளர் வீட்டை திமுகவினர் முற்றுகை !

இதைத்தொடர்ந்து, லட்சுமணன் வீட்டில் சோதனை நடத்த வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கே ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*