நாமக்கல் இளைஞரின் ஆட்டோ வீடு: அந்த இளைஞருக்கு ஆனந்த் மகேந்திரா அழைப்பு

நாமக்கல் இளைஞரின் ஆட்டோ வீடு: அந்த இளைஞருக்கு ஆனந்த் மகேந்திரா அழைப்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்த அருண்பிரபு என்ற இளைஞர், ஒரு ஆட்டோவை மாடி வீடு போலவே வடிவமைத்துள்ளார். அதில் சமையலறை, குளியலறை, படுக்கை அறை என்று அனைத்துவித வசதிகளும் இருக்குபடி அந்த ஆட்ட்டோ வீடு அமைந்திருக்கிறது. மொட்டை மாடியில் ஈசி சேரில் படுத்துக்கொண்டு பேப்பர் படிக்கும் வசதியையும் அந்த ஆட்டோ வீட்டில் இருப்பதை அறிமுகப்படுத்தியுள்ளார் அருண்பிரபு.

நாமக்கல் இளைஞரின் ஆட்டோ வீடு: அந்த இளைஞருக்கு ஆனந்த் மகேந்திரா அழைப்பு

சில ஆண்டுகளுக்கு முன்பே இது வடிவமைக்கப்பட்டாலும் கடந்த ஆண்டு இதை மாசிமோ கண்டூசி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட, அதை தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா.

நாமக்கல் இளைஞரின் ஆட்டோ வீடு: அந்த இளைஞருக்கு ஆனந்த் மகேந்திரா அழைப்பு

அருண்பிரபுவின் கற்பனை திறனை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று தெரிவித்துள்ள ஆனந்த் மகேந்திரா, தங்களது மகேந்திரா நிறுவனத்தின் தயாரிப்பான பொலீரோ பிக்கப் வாகனத்தையும் இப்படி வடிவமைக்க அருண்பிரபு முன்வருவாரா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

நாமக்கல் இளைஞரின் ஆட்டோ வீடு: அந்த இளைஞருக்கு ஆனந்த் மகேந்திரா அழைப்பு

மேலும், அருண்பிரபுவுடன் நான் தொடர்புகொள்ள வேண்டும். அதற்கு யாரேனும் உதவிட முடியுமா? என்றும் கேட்டிருக்கிறார்.

ஆனந்த் மகேந்திராவின் டுவிட்டுக்கு பின்னர், ஆட்டோ வீடும் அருண்பிரபுவும் உலக அளவில் பேமஸ் ஆகிவிட்டனர்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*