நாளை தமிழகம் வரவிருக்கும் சசிகலாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகள்

நாளை கர்நாடகாவின் தேவனஹல்லியில் இருந்து புறப்படும் அவருக்கு தமிழக எல்லையான ஓசூரில் நான்கு இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

நாளை தமிழகம் வரவிருக்கும் சசிகலாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகள்

அத்திப்பள்ளியில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை என வரும் சசிகலாவுக்கு ஐந்து மண்டலங்களாக பிரித்து அங்கே வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

நாளை தமிழகம் வரவிருக்கும் சசிகலாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகள்

இதையடுத்து, வழிநெடுகிலும் சசிகலாவை வரவேற்று போஸ்டர், பேனர், கொடி, தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சசிகலாவை வரவேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து அமமுகவினர் ஓசூர் செல்கின்றனர்.

நாளை தமிழகம் வரவிருக்கும் சசிகலாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகள்

இந்நிலையில், நமது எம்ஜிஆர் நாளிதல், ‘சசிகலா தலைமையேற்று, செயல்பட்டால்தான் அதிமுக தழைக்கும் என்ற நம்பிக்கையில் தொண்டர்கள் அவரை வரவேற்க தயாராகிவிட்டனர். தீய சக்தி மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒற்றுமையுடன் ஒன்றுப்பட்டு, சசிகலாவின் தலைமையை ஏற்கவேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

நாளை தமிழகம் வரவிருக்கும் சசிகலாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகள்

அதேபோல், முரசொலி நாளிதழில், ‘சசிகலா, சென்னை வரவிருக்கும் செய்தி, எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தை நடுங்க வைத்துள்ளது. முதல்வர் பதவியை காக்க வரம் தந்த சசிகலா தலையிலேயே கைவைத்த காட்சிகள் துரோகத்தின் உச்ச கட்டம். சின்ன டானுக்கும் பெரிய டானுக்கும் நடக்கும் கிளைமாக்ஸ் காட்சிகளில் வெல்லப்போவது யார் ?’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*