பட்டுக்கோட்டை, ஈரோடு மேற்கு, வால்பாறை தமிழ் மாநில காங்கிரசுக்கு 3 தொகுதிகள்: அதிமுக ஒதுக்கியது

பட்டுக்கோட்டை, ஈரோடு மேற்கு, வால்பாறை தமிழ் மாநில காங்கிரசுக்கு 3 தொகுதிகள்: அதிமுக ஒதுக்கியது

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழக அரசியல் கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் நேர்காணல் உள்ளிட்ட பணிகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் செய்து வருகின்றன.

பட்டுக்கோட்டை, ஈரோடு மேற்கு, வால்பாறை தமிழ் மாநில காங்கிரசுக்கு 3 தொகுதிகள்: அதிமுக ஒதுக்கியது

இந்தநிலையில், அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகளும், பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு உடன்பாடு இன்னும் இழுபறியிலேயே உள்ளது . இதனால் தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டுக்கோட்டை, ஈரோடு மேற்கு, வால்பாறை தமிழ் மாநில காங்கிரசுக்கு 3 தொகுதிகள்: அதிமுக ஒதுக்கியது

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசனின் த.மா.காவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. த,மா.காவுக்கு பட்டுக்கோட்டை, ஈரோடு மேற்கு, வால்பாறை ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்டுக்கோட்டை, ஈரோடு மேற்கு, வால்பாறை தமிழ் மாநில காங்கிரசுக்கு 3 தொகுதிகள்: அதிமுக ஒதுக்கியது

தமிழ் மாநில காங்கிரஸ் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட 12 தொகுதிகள் வேண்டும் என்று அதிமுகவிடம் கேட்டிருந்தது. ஆனால், அதிமுக அதை ஏற்க மறுத்து, குறைந்த அளவிலான தொகுதிகளையே ஒதுக்கியுள்ளது.

இறுதியாக 9 சீட்டுகள் வரை கேட்டு தமிழ் மாநில காங்கிரஸ் இறங்கி வந்த நிலையில்கூட, அதிமுக 3 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*