பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் போட்டி: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது.

பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் போட்டி: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இருந்தது. தற்போது நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் இருந்துவருகிறது. இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டு இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், திமுகவுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தத்தின்படி பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நான் போட்டியிடுகின்றேன்.பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மக்களிக்கான பிரச்னைகளை சட்டமன்றத்தில் வாதாடுவேன்.

பண்ருட்டி தொகுதி மக்கள் எங்களுக்கான வெற்றியை பெற்று தரவேண்டும். அதிமுக கூட்டணி நாளுக்கு நாள் பலவீனமாகி கொண்டு இருக்கிறது.

பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் போட்டி: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்

திமுக கூட்டணி நாளுக்கு நாள் பலமாகிக் கொண்டு இருக்கிறது. இதுவரை தமிழகத்தில் பெறாத வெற்றியை திமுக பெறும். திமுக கூட்டணியை எந்த கொம்பனாலும் வெல்ல முடியாது. கமல் யாரோ எழுதிக் கொடுப்பதை பேசிக்கொண்டிருக்கிறார். நிழல் என்பதுவேறு நிஜம் என்பதுவேறு என்று வேல்முருகன் கூறினார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*