பத்திரிக்கையாளர்களை ஊடகத்தினரை தரக்குறைவாக பேசிய ஹெச்.ராஜா: எண்ட் கார்டு போட்ட அண்ணாமலை!

64 / 100

பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகத்தினர் குறித்து பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா அவதூறாக பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்தநிலையில், ஊடகத்தின் மீது பாஜக மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருப்பதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர்களை ஊடகத்தினரை தரக்குறைவாக பேசிய ஹெச்.ராஜா: எண்ட் கார்டு போட்ட அண்ணாமலை!

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜனநாயகத்தின் தாங்கும் தூணாக மதிக்கப்படும் பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகத்தினர் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை உண்டு. நல்லவற்றை எடுத்துரைத்து அல்லவற்றை கண்டித்து சுட்டிக்காட்டும் உற்சாகப்படுத்தும், உணர்வூட்டும், பாராட்டும் வழங்கி, மக்களின் மனக் கண்ணாடியாக ஊடகமும் பத்திரிக்கைகளும் திகழ்ந்து வருகிறது. இதில், எந்த மாற்றுக் கருத்துமில்லை.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியில் பத்திரிக்கைகளின் பங்கு இன்றியமையாதது. அந்த அக்கறையும் ஆதரவும் பாரதிய ஜனதா கட்சிக்கு எப்போதுதும் தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பத்திரிகைகள் மற்றும் ஊடகத்தின் மீது தமிழக பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிக்கையாளர்களை ஊடகத்தினரை தரக்குறைவாக பேசிய ஹெச்.ராஜா: எண்ட் கார்டு போட்ட அண்ணாமலை!

சென்னையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா பத்திரிக்கையாளர்களை ஊடகத்தினரை தரக்குறைவாக பேசினார். இதற்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தநிலையில், ஊடகங்கள் ஹெச்.ராஜாவை புறக்கணிக்க வேண்டும் என்றும் வெகுவாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அண்ணாமலை இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*