பன்முக ஆற்றலோடு அரசியல் களத்தில் நீண்டகாலம் திகழ்ந்தவர் தா.பாண்டியன்: டிடிவி.தினகரன் புகழாரம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா தா.பாண்டியன் அவர்களின் மறைவிற்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பன்முக ஆற்றலோடு அரசியல் களத்தில் நீண்டகாலம் திகழ்ந்தவர் தா.பாண்டியன்: டிடிவி.தினகரன் புகழாரம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பெரியவர் தா.பாண்டியன் உடல்நலக்குறை காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 89.


இந்நிலையில், அமமுக தலைவர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பெரியவர் தா.பாண்டியன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

பன்முக ஆற்றலோடு அரசியல் களத்தில் நீண்டகாலம் திகழ்ந்தவர் தா.பாண்டியன்: டிடிவி.தினகரன் புகழாரம்!

பெரியவர் தா.பாண்டியன், சிறந்த இடதுசாரி சிந்தனை வாதியாகவும், மக்களைஈர்த்த பேச்சாளராகவும், கருத்தாழமிக்க எழுத்தாளராகவும் திகழ்ந்த பன்முக ஆற்றலாளர். அரசியல் களத்தில் மனதில் பட்டதை துணிச்சலோடு பேசியும், செயல்பட்டும் வந்தவர்.

கட்சிகளைத் தாண்டி புரட்சித்தலைவி அம்மா அவர்கள்மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தவர். தனிப்பட்ட முறையில் என்னோடு நட்புடனும் அன்புடனும் பழகியவர். திரு.தா.பாண்டியன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*