பயோ கேஸ் மூலமாக இயங்கும் பயணிகள் பஸ்: தமிழகத்தின் முதல் பஸ் அறிமுகம்

தமிழ்நாட்டில் முதல் பயோ கேஸ் பஸ் அறிமுகம்

தமிழகத்தின் முதல் பயோ கேஸ் மூலமாக இயங்கும் பயணிகள் பஸ், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் அறிமுகம் செய்துள்ளனர்.

பயோ கேஸ் மூலமாக இயங்கும் பயணிகள் பஸ்: தமிழகத்தின் முதல் பஸ் அறிமுகம்

இந்தியாவில் பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல், டீசலால் இயக்கப்படுகிறது. இதனால், வாகனங்களில் இருந்து வரும் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இப்போ இருக்கும், வாகனங்களில் சிறியளவு வடிவமைப்பை மாற்றினால், எல்.பி.ஜி, எரிவாயுவை பயன்படுத்தி, வாகனங்களை இயக்க முடியும். அதேசமயம், சி.என்.ஜி. என்ற, கம்பரஸ்டு நேச்சுரல் கேஸ் எனப்படும், இந்த இயற்கை எரிவாய்வு காய்கறிகள் கழிவு, தாவரங்கள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது.

ஆனால், இன்ஜின்களை மாற்றினால் மட்டுமே பஸ், லாரிகளுக்கு பயன்படுத்த முடியும். தற்போது, தமிழகத்தில் முதல் முறையாக ராசிபுரம், தனியார் பஸ்சில் சி.என்.ஜி. கேஸ் கிட் பொருத்தப்பட்டுள்ளது. ராசிபுரத்தில் இருந்து சேலம் வரையில் செல்லும் இந்த பஸ்சில், பயோ கேஸ் கிட் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது தனியார் பஸ் மூலம் சோதனை ஓட்டம் மட்டுமே முடித்துள்ளது. தமிழகத்தின் பயோ கேஸ் கிட் பொருத்தப்பட்ட முதல் பஸ்ஸாக, சேலம்–ராசிபுரத்திற்கு தனது பயனத்தை தொடங்க இருக்கிறது.

பயோ கேஸ் மூலமாக இயங்கும் பயணிகள் பஸ்: தமிழகத்தின் முதல் பஸ் அறிமுகம்

தற்போது, டீசல் லிட்டர், 87 ரூபாயாகவும், பெட்ரோல் லிட்டர் ரூ. 90 ரூபாய்க்கு மேலும் உள்ளது. ஆனால், சி.என்.ஜி கேஸ் ரூ.56 க்குதான் விற்கப்படுகிறது. மைலேஜ் இரண்டும் ஒரே அளவுதான் கிடைக்கிறது. இதனால், 40 சதவீதம் வரை செலவு மீதியாகிறது. சி.என்.ஜி. கிட் பஸ்சில் பொருத்த, டீசல் டாங்கை நீக்கியவிட்டு, தலா 13 கிலோ கொள்ளளவு கொண்ட எட்டு சிலிண்டர்கள், ஒரு பக்கத்திற்கு 4 வீதம் பஸ்ஸில் பொருத்தப்படுகிறது. இதோடு பம்பு, நாசில்கள் நீக்கப்படுகிறது. திறன் கொண்ட ரேடியேட்டர் மற்றும் பிரத்யேகமான பிஸ்டன்கள் பொருத்தப்படுகின்றன.

பயோ கேஸ் மூலமாக இயங்கும் பயணிகள் பஸ்: தமிழகத்தின் முதல் பஸ் அறிமுகம்

இதையடுத்து, ஆரம்பத்தில் பிக்கப் சற்றே குறைவாக இருந்தாலும் வேகமெடுத்த பிறகு வித்தியாசம் தெரிவதில்லை எனக் கூறப்படுகிறது. சிஎன்ஜி கிட்டிற்கு சுமார் ரூ.5 லட்சம் மட்டுமே செலவாகிறது. மேலும், பயோகேஸ் பயன்படுத்துவதால் இஞ்சின் சத்தம் இருக்காது, புகை குறைவாக இருப்பதே இதன் சிறப்பம்சமாகும்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*