பள்ளி, கல்லூரிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை : கல்வித்துறை அமைச்சர் தகவல்!

13 / 100

புதுச்சேரியில் தற்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லையென புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை : கல்வித்துறை அமைச்சர் தகவல்!

கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பரிசீலித்தன. ஆனால், கடந்த ஒரு வாரமாக பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளை திறக்கும் முடிவில் இருந்து மாநில அரசுகள் பின் வாங்கியுள்ளன. இதுவரை பஞ்சாப் மாநிலத்தைத் தவிர, வேறெந்த மாநிலத்திலும் இதுவரை பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை : கல்வித்துறை அமைச்சர் தகவல்!

இதையடுத்து, புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், மூன்றாவது அலை எப்போது வரும் என்பது தெரியவில்லை. அதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை : கல்வித்துறை அமைச்சர் தகவல்!
About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*