பள்ளி மாணவிகளை பார்த்ததும் பாதி வழியில் காரை நிறுத்தி, மாணவிகளை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

62 / 100

தருமபுரி செப்.30.,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், அரசுத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுப் பணியை மேற்கொள்ளவும் தருமபுரி சென்றார்.

பள்ளி மாணவிகளை பார்த்ததும் பாதி வழியில் காரை நிறுத்தி, மாணவிகளை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

தருமபுரி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய கட்டிடம் உள்ளிட்ட புதிய கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நான்கு தளங்களாக 5,060 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள வளாகத்தை அவர் பார்வையிட்டார். இந்த பிரிவு ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

பள்ளி மாணவிகளை பார்த்ததும் பாதி வழியில் காரை நிறுத்தி, மாணவிகளை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

இதனையடுத்து, தருமபுரி மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 7 ஊராட்சிகளுக்கும் மற்றும் சிறப்பாக கொரோனா பணியாற்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோருக்கு விருது மற்றும் கேடயங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு சுகாதாரத் துறையின் பரிசு பெட்டகங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, பென்னாகரம் வட்டம் ஒகேனக்கலில் அமைந்துள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒகேனக்கல் புறப்பட்டுச் சென்றார்.

பள்ளி மாணவிகளை பார்த்ததும் பாதி வழியில் காரை நிறுத்தி, மாணவிகளை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

தருமபுரியில் இருந்து ஒகேனக்கல் புறப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதி வழியில் காரை நிறுத்தி, திடீரென பள்ளி மாணவிகளை சந்தித்தார். அப்பொழுது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து கைதட்டி உற்சாகமாக பள்ளி மாணவிகள் வரவேற்றனர். அதன்பிறகு பள்ளியின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்கள், மாணவிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*