பாஜக கொடுத்த அழுத்தத்தால் சசிகலா அரசியலை விட்டு விலகல்: திருமாவளவன் கருத்து!

பாஜக கொடுத்த அழுத்தத்தால் சசிகலா அரசியலை விட்டு விலகல்: திருமாவளவன் கருத்து!

திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நங்கள் புறக்கணிக்கவில்லை என்று திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

பாஜக கொடுத்த அழுத்தத்தால் சசிகலா அரசியலை விட்டு விலகல்: திருமாவளவன் கருத்து!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் நிலையில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக பேசி வருகிறது. திமுகவுடனான பேச்சுவார்தையில் உடன்பாடு எட்டாததால் திமுகவுடனான பேச்சுவார்த்தையை விசிக புறக்கணித்ததாக கூறப்பட்டது.

பாஜக கொடுத்த அழுத்தத்தால் சசிகலா அரசியலை விட்டு விலகல்: திருமாவளவன் கருத்து!

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன், திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை புறக்கணிக்கவில்லை. திமுக கூட்டணியில் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து பயணிக்கும். மூன்றாவது அணியில் விசிக இணைந்து பயணிக்க வாய்ப்பு உள்ளதா என்பது பொருத்தமற்ற கேள்வி என்றார்.

பாஜக கொடுத்த அழுத்தத்தால் சசிகலா அரசியலை விட்டு விலகல்: திருமாவளவன் கருத்து!

இதைத் தொடர்ந்து சசிகலா அரசியலில் இருந்து விலகியது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், பாஜகவின் நெருக்கடிக்கு ஆட்பட்டு சசிகலா அரசியலில் இருந்து விலக முடிவு எடுத்திருக்கலாம் என்று கூறினார்.

பாஜக கொடுத்த அழுத்தத்தால் சசிகலா அரசியலை விட்டு விலகல்: திருமாவளவன் கருத்து!

திமுக கூட்டணியில் இதுவரை இருந்துவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இன்று மாலை உடன்பாடு எட்டப்பட்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*